பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Wednesday, February 14, 2007

காதலர் தினம் - V

Image and video hosting by TinyPicகாதலர் தினம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பல இடங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. நீங்களும் அந்த விவாதத்தில் ஏற்கனவே பங்கேற்றிருப்பீர்கள். ஆனாலும் காதலர் தினத்திலேயே நடக்கும் இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டு நீங்கள் விவாதிப்பது ஒரு சுவையான நிகழ்வாக இருக்கக் கூடும்.

காதலர் தினம் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார யுக்தி என்பது உட்பட, காதலுக்கும் காதலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் தேவையா என்பது வரை விவாதங்கள் நடந்து வந்தாலும் காதலர் தினம் என்னவோ களை கட்டித்தான் வருகிறது.

காதலர் தின வலைப்பதிவுகளும் கடந்த வாரம் முதலே எழுதப் பட்டு வருகின்றன. இன்றும் ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன. எனவே காதலர் தின பட்டிமன்றத்தில் பங்கேற்று கருத்துக்களை சொல்லுங்கள்.

சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. அது பின்னர் அறிவிக்கப் படும்.

(இதோ அறிவிச்சாச்சு: அருமையான புத்தகங்கள் பரிசு. வழங்குபவர்: செந்தழல் ரவி)

விவாதத் தலைப்பு

காதலர் தினம்

தேவை / தேவையில்லை

17 comments:

  1. ✪சிந்தாநதி said...

    உங்க்ள் கருத்தையொட்டிய தலைப்பில் (காதலர் தினம்-தேவை, காதலர் தினம்-தேவையில்லை) இங்கே பின்னூட்டமாக உங்கள் கருத்துக் களை பதிவு செய்யுங்கள்.

  2. - யெஸ்.பாலபாரதி said...

    கொண்டாடுவதால் ஒன்றும் மேசமாகிவிடப்போவதில்லை என்பது என் கருத்து.
    இல்லை.. இது அயலானில் விழா என்று சொல்லுவார்களேயானால்.. அயலான் ஏற்படுத்தி இருக்கும் எல்லா விழா+ பொருட்கள்+ கருத்தியல் என எல்லா வற்ரையும் இழக்க சம்மதமான்னு கேட்கனும்.
    தவிர..
    நம்மவர்கள் ஏற்படுத்திய வசந்தகால விழாவை நடத்த இவர்கள் முன் வரணும்.
    இருப்பதால் தவறில்லை என்பது என் கருத்து.

  3. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    கொண்டாடினா கொண்டாடிக்கட்டுமே,சந்தோஷமா.
    அன்பை வெளிப்படுத்த எல்லா நாளும்
    நல்ல நாள் தான்.மத்த நாள் இல்லாட்டியும் அன்னைக்கு மட்டுமாவது சிலர் வெளிப்படுத்தறது நல்லது தானே. அன்பை கொண்டாட ஆள் இல்லாதவங்க வேணாம் வேணாம்ன்னு தான் சொல்லுவாங்க.

  4. Anonymous said...

    i am aasath

    i appreciate LOVE... Because it is the Nature like Nature of Changes of the existing system...

    V. day shouldn't required. In the prutal productivity of Capitalism has send its' organ (labor) to hell of Workaholic. At this stage, that organ needs the day for taking some long breaths. IT need such relationship with its' mother/wife/father/brother/childs ...etc. It need to to heard such music...It needs a day for search its' companion...IS it public prutal ... In this occasion we need V. day, mothers' day, fathers day, chidrens dar, bathing day (due to water privitization), breathing day, ... etc.

    That machine can't like to change as human being. One day that machine go to contemned as a Ship.

  5. MyFriend said...

    364 நாட்கள் சந்தோஷமா இல்லாதவங்க இந்த ஒரு நாளாவது ஸ்பெஷலா சந்தோஷமா கொண்டாடட்டுமே!! ஹிஹிஹி..

    கொண்டாடுகிறேன் பேர்வழின்னு பணத்தை தண்ணீராய் கரைப்பதும் நல்லதல்ல என்பது என் கருத்து..

  6. சந்தர் said...

    காதலர் தினத்திலிருந்து சரியாக பத்தாவது மாதம் குழந்தைகள் தினம் வருதே அதை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. மத்தபடிக்கு சிறுசுங்க சந்தோஷமா (எச்சரிக்கையோட) இருந்தா சரி. (எனக்கு என்னமோ சந்தோஷமான திருமண நாட்களை கொறைச்சிக்கிறாங்களோன்னு தான் நினைக்கத்தோணுது!)

  7. Anonymous said...

    USELESS. THIS IS A WESTERNFLU

  8. நாமக்கல் சிபி said...

    கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை!

    காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பொன்னாள்! ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்போருக்கு மீண்டும் தன் காதலைச் சொல்லி கொண்டாடிக்கொள்ள ஒரு வாய்ப்பு! அவ்வளவுதானே!

    ஆனால் பன்னாட்டுக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லும்படியாக டிஸ்கொதே, குடித்துவிட்டுக் கும்மாளம் போடுதல் என்றெல்லாம் இல்லாமல் ஒரு பரிசைப் பரிமாறிக் கொண்டோமா, ஏதேனும் ஒரு ஹோட்டலில் விருந்தைச் சாப்பாடு சாப்பிட்டோமா அல்லது கோவிலுக்குப் போனோமா என்பதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது.

  9. MSATHIA said...

    நம்ம ஊருல ஆடி 18தான் காதல் தினமா இருந்துச்சு( மூத்த பதிவர்களே.. அப்பிடியா?? அன்னைக்கு ஆற்றங்கரைக்கு போய் கூட்டாஞ்சோறு சாப்பிட்டுட்டு குறும்பெல்லாம் பண்ணுவாங்களாம். ) இப்போ ஆத்துல தண்ணியே இல்லையா அதுனாலே Feb 14லா மாத்திடாங்க!!

  10. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    பரிசு பற்றி முதலில் படிக்கலையே.சரியா கவனிக்கலை.
    சாதி மதம் ஊர் பேதமெல்லாம் இல்லாமல் இன்பமான உலகம் அமைய காரணமாக இருக்கப் போகிற அன்பு(காதல்) க்கு எடுக்கும் விழா.
    தேவையே.பணம் முக்கியமில்லை.குணம் போதுமென்று அன்பை காண்பிக்க கிடைத்த பண்டிகை.
    பண்டிகையை அவரவர் கையிருப்பை வைத்து கொண்டாடி மகிழ்வது போல் வீட்டில் பூத்த ரோஜாவோ , காசு போட்டு வாங்கிய பூங்கொத்தோ ,
    நட்சத்திர உணவக மெழுகுவத்தி டின்னரோ மொட்டை மாடி நிலாச்சோறோ கொண்டாடி மகிழ ஒரு நாள் கூடுதலாய் ஒரு தினம்.

  11. தமிழ்நதி said...

    மனங்களை மலர்த்துவது காதல். அதைக் கொண்டாடுவதில் என்ன பிழை...? ஆனால்... mother's day, father's day போன்றவற்றையும் இங்கு கொண்டாட ஆரம்பித்தால் கடுப்பாகத்தானிருக்கும். தாய் தகப்பனை திடுக்கென்று விழித்து நினைத்துக்கொள்கிற வெள்ளைக்காரரைப்போல நாமும் ஆகிவிடுவோமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். கொண்டாட்டங்களை விரும்புகிறவர்களுக்கு காதலர் தினம் என்பது மேலதிகமான கொசுறு. மற்றபடி காதலோ பாசமோ நட்போ அடுத்தவரை நேசிக்கிற தன்மை எப்போதும் மனதில் இருப்பதே சிறப்பு. எனக்கு முதல் பரிசெல்லாம் வேண்டாம். ஆறுதல் பரிசு என்று சிலதை அறிவிக்கக்கூடாதா?

  12. சென்ஷி said...

    காதலர் தினம் தேவையில்லை.

    என்னடா அபசகுனமா நல்ல நாளை வேணாம்ன்னு சொல்றானேன்னு தப்பா நினைக்காதீங்க. இது ஒரு நல்லெண்ணத்துல சொல்றது.

    காதலர் தினத்தன்னிக்கு தன்னோட காதல சொல்லலாம்ன்னு போன காதலனுக்கு தெரியாது -
    அன்னிக்கு அவளுக்கு கல்யாணமுன்னு. (பி.கு- அவளும் அவனை மனமார காதலித்தாள். இவன் பதில் தெரிய காத்திருந்தாள். இது என்னிடம் அந்தப்பெண் கூறியது)

    பாருங்க, நல்ல நாளுன்னு சொல்ற நாளால ஒரு காதல் விதைக்குறதுக்கு முன்னாடியே விழுந்துடுச்சு.

    இந்த நாள் இல்லைன்னா இந்த கூத்து நடந்திருக்குமா?

    அப்புறம் வாழ்த்து அட்டை.
    நமக்கு தெரிஞ்சு பொங்கல் வாழ்த்து மட்டும்தான் பேரு போடாம தைரியமா அவ வீட்டு அட்ரஸ் போட்டு அனுப்ப முடியும். காதல்ல முடியுமா?

    காதலிக்கிற பொண்ணுக்கிட்ட தன்னோட காதலை சொல்ற தைரியத்த காதலர் தினம் மட்டும்தான் தரமுடியும்னா அந்த தினம் நமக்கெதுக்கு? எந்த நாளானாலும் தைரியமா பிடிச்ச பொண்ணுக்கிட்ட மனச தொறந்து காட்டிட வேண்டியதுதானே!


    காதலிச்சவங்க மறுக்கா புதுப்பிக்க Feb - 14 ஆம்,
    இதென்ன இன்ஷ்யூரன்ஸா?
    நல்லா காமெடி பண்றீங்கப்பா...

    இங்க பாரு,
    காதல எல்லா நாளும் கொண்டாடுறவங்களாலதான் கல்யாணம் ஆனாலும் காதலனாயிருந்து காதலிக்க முடியும். மத்தவங்க கல்யாண நாளன்னிக்கு அடுத்த ஜென்மத்த பத்தி வேண்டிக்கத்தான் முடியும்..சொல்லீட்டேன்


    சென்ஷி

  13. வெங்கட்ராமன் said...

    எனக்கு என்னமோ இதெல்லாம், தேவை இல்லேன்னு தான் தோனுது.

    வியாபார நிறுவனங்களின் வியாபார தந்திரமாகவும், டி.வி எப்.எம் ன்னு காசு பார்க்க தான் இவ்வளவு அளப்பறையா கொடுக்குறானுக.

    எல்லா காதலர் தினத்தையும், ஒரே காதலன்/காதலி யோட கொண்டாடுறவுங்க எத்தனை பேர்.

  14. ✪சிந்தாநதி said...

    இப்போது நேரம் 3 மணி. போட்டி இத்துடன் நிறைவு பெறுகிறது. பரிசு விவரம் சற்று நேரத்தில்...

  15. ✪சிந்தாநதி said...

    காதலர் தினம் தேவையா? போட்டி முடிவு.

    போட்டியை துவக்கி வைக்க அழைக்கப் பட்ட நண்பர் பாலபாரதி தவிர்த்து மற்ற கருத்துக்கள் பரிசீலிக்கப் பட்டதில்,

    இது பட்டிமன்ற பாணி விவாதம் என்று ஆரம்பத்திலேயே சொல்லப் பட்டதை பலரும் கவனித்திருக்க வில்லை என்று தோன்றுகிறது. அதே சமயம் பட்டி மன்றம் மாதிரி அறிவிக்கப் பட்ட பேச்சாளர்கள் இங்கில்லை. எனினும் எதிராளியை, எதிர்க்கருத்தை சவாலுக்கழைத்து ஒரே ஒருவர் மட்டுமே எழுதியிருக்கிறார். மற்றவர்கள் எதிர்க்கருத்தையும் தாங்களே சொல்லி தங்கள் தரப்பை கொஞ்சம் பலவீனமாக்கிக் கொண்டதாக தோன்றுகிறது.

    "சந்தோஷமா.
    அன்பை வெளிப்படுத்த எல்லா நாளும்
    நல்ல நாள் தான்.மத்த நாள் இல்லாட்டியும் அன்னைக்கு மட்டுமாவது சிலர் வெளிப்படுத்தறது நல்லது தானே. அன்பை கொண்டாட ஆள் இல்லாதவங்க வேணாம் வேணாம்ன்னு தான் சொல்லுவாங்க." முத்துலெட்சுமி(லட்சுமி)

    எதிர்க்கருத்து சொன்ன இருவருமே இந்தக் கருத்தை மறுத்து எதுவும் சொல்லாததால் இந்தப் போட்டியாளர் வெல்கிறார்.

    சுவையான சில துளிகள்

    காதலர் தினத்திலிருந்து சரியாக பத்தாவது மாதம் குழந்தைகள் தினம் வருதே அதை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு - chandar

    நமக்கு தெரிஞ்சு பொங்கல் வாழ்த்து மட்டும்தான் பேரு போடாம தைரியமா அவ வீட்டு அட்ரஸ் போட்டு அனுப்ப முடியும். காதல்ல முடியுமா? - சென்ஷி

    எல்லா காதலர் தினத்தையும், ஒரே காதலன்/காதலி யோட கொண்டாடுறவுங்க எத்தனை பேர்? - வெங்கட்ராமன்.

    -oOo-

    முத்துலெட்சுமி(லட்சுமி) பரிசு விவரத்துக்கு sinthanadhi at gmail dot com முகவரிக்கு மெயில் அனுப்புங்க.

    ஆறுதல் பரிசு என்று சிலதை அறிவிக்கக்கூடாதா? - தமிழ்நதி

    இந்த முறை ஒரே பரிசு தான். போட்டிகள் தொடர்ந்து வரும். நிறைய போட்டியாளர்கள் கலந்து கொள்வதைப் பொறுத்து பரிசுகள் தீர்மானிக்கப் படும்.

    மேலும் விவரங்கள் இங்கே!

  16. ✪சிந்தாநதி said...

    ஆசாத் உங்கள் கருத்துக்கு நன்றி. தயவு செய்து தமிழில் எழுதுங்கள். இந்தப் பதிவின் முகவரியைப் பார்த்தீர்களா?

    tamiltalk

    எனது சிந்தாநதி பதிவின் கீழ்ப்பகுதியில் தமிழில் எழுதும் கருவிகள் உள்ளன. அதைக்கூட பயன்படுத்தலாம்.

  17. agalvenkat said...

    மனித உறவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் - பிறரை - பிறவுயிரை - இவ்வுலகை எவ்வகையிலும் கெடுக்காதவரை அவை மனித உரிமைகள். அவற்றை பறிப்பவர்கள்தான் தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும்.

    சமூகம் - குடும்பம் இவ்விரண்டும் குழந்தைகளை வளர்பதில் - அதிலும் நம் இந்தியா போன்ற நாடுகளில் - மனிதங்களை சிறக்க வைப்பதில் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழமுடியும். பெரும்பாலானவர்களுக்கு இது புரிந்தாலும் எப்படி வளர்ப்பது என்பதில் ஆதிக்க சிந்தனையை கொண்டு குறுகிய கண்ணோட்டத்தை விதைக்கிறார்கள். வாழ்-வசதிகளில் எளிய மக்களின் குழந்தைகள் வாழ்க்கை புரியாமலேயே சமூக எதிரிகளிடம் அடிமைப்படுகிறார்கள். ஆகவே இதில் மற்றவர்களை எப்போது புரிந்துகொள்வது?

    சரி தீர்வு என்ன?

    பழமைவாதிகளில், போலித்தனமான அரசியல்வாதிகளில் பலரை (99.9%) மூட்டைகட்டி அப்புறப்படுத்தினால், இக்கால இளைஞர்கள் விடுபட்டு வெளிவந்து உலகத்தில் வாழ்வதையே இனிமையாக்குவார்கள். அதற்கு நாளானாலும் அது நடக்கும் என்று நம்புகிறேன். தேவை சிறந்த சுயனலமற்ற - தலைமைகள் மற்றும் அவர்களை வழிகாட்டி ஊக்கமளித்து உருவாக்க - தெளிந்த சான்றோர்கள்.

    இயற்கை வழியில் யோசியுங்கள்.

    இந்த பூலோக - ஏன் பிரபஞ்சத்திற்கே மனிதன் என்பது ஒரு அபூர்வ உயிரினம். உலக உருண்டையின் வாழ்கையில் அதன் மேனியெல்லம் அறிந்த கிருமித்தனமான காதலன் - மனிதன் மட்டுமே. அவனும் இந்த பெரிய உலகத்தை பொருத்தவரை - ஈசல் போல வந்து வாழ்ந்து மறைபவன்.

    இதே அபூர்வ மனிதஉயிரினமானது பெரும்பாலும் வசதிகள், அதிகாரங்கள் - மூளைசலவை வார்த்தைகளுக்கு அடிமைபடும், எனவே தன் சிந்திக்கும் - பகுத்தறியும் திற்னையே கொச்சைபடுத்திக்கொள்ளும். அதில் சில அடிமைதனங்கள் மரபணுசார்ந்தே இருந்தாலும் சிந்திக்கும் மேன்மையான திறமை மனிதனை அவனுடைய அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லும்.

    இந்த உலகத்தை புரிந்துகொண்டு ஒன்றுபட்ட கைகளால் அணைத்துக்கொள்வோமா? இல்லை வேறுபாடுகளை விரிவுபடுத்திக்கொண்டு நம் தலைக்கு நாமே கொள்ளிவைத்துக்கொள்வோமா?

    இனம் - மதம் - சாதி அடிப்படையான அமைப்புகள் மக்களை மூடர்களாகவே வைத்துக்க்கொள்ள விரும்பும் முரட்டுதனமான குறூகிய கண்ணோட்ட அமைப்புகள். அவற்றை ஊக்கப்படுத்தாதீர்கள்.

    அவற்றால் உலகெங்கும் மனிதகுலம் இழந்த, இழக்கின்ற இழப்புகள் போதும்.

    இளைய சமூகம் சிந்திக்கட்டும்!