பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Tuesday, February 27, 2007

அதிரடி பரிசுப் போட்டி-3

Image and video hosting by TinyPicலைப்புப் போட்டிக்கு எதிர்பார்த்த அளவு பதில்களும் வரவில்லை. எதிர்பார்த்த மாதிரி கேட்சிங் தலைப்பும் வாசகமும் கிடைக்கவில்லை.

தலைப்பும் டிஸ்கிரிப்ஷனும் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். ஆனால் அப்படி சரியாக எதுவும் வரவில்லை. மின்னஞ்சலில் அனானியாக வந்த ஒரு மடலில் இருந்த வாசகம் சில மாற்றங்களுடன் (பதில் தேடும் கேள்வி-பதிலைச் சொல்லுங்க பரிசை வெல்லுங்க) ஓரளவு திருப்தியானதாக தேர்வு செய்யப் படுகிறது. அனானி பரிசுக்கு பெயர், முகவரி தரவிரும்பாததாலோ என்னவோ பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நாங்கள் எதிர்பார்த்த நகைச்சுவையான ஒரு கேட்சிங் வாசகம் இன்னும் கிடைக்காத நிலையில் இந்தப் போட்டி தொடர்ந்து நிலவில் இருக்கும். நல்ல வாசகம், தலைப்பு இனியும் நீங்கள் அனுப்பலாம். நல்ல தலைப்பு, வாசகம் தேர்வு செய்யப் படும்போது பரிசு வழங்கப் படும்.

-oOo-

சரி..அதிருக்கட்டும். இன்றைய போட்டிக்கு வருவோம்.

புகழ்பெற்ற இணைய தளங்களான
கூகுள், யாகூ
இரண்டில் எது சிறந்தது? ஏன்?

இது பட்டிமன்ற விவாதம் போன்றதுதான். முன்னவர் பதில்களை மறுத்தும் நிரூபிக்க வேண்டும். அனுபவப்பூர்வமான சாதக பாதகங்களை எழுத முயலுங்கள். சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. வெற்றி பெறும் போட்டியாளர் வித்லோகா தளத்தில் இருந்து தேர்வு செய்யும் புத்தகம் பரிசாக வழங்கப் படும். இந்த வார பரிசை வழங்குபவர் சிறில் அலெக்ஸ்.


Monday, February 19, 2007

பரிசுப்போட்டி-2


http://tamiltalk.blogspot.com என்ற இந்த தளம் போட்டி, புதிர்கள், பட்டிமன்ற விவாதம் போன்றவைகளுக்கானது. இங்கு தொடர்ந்து போட்டிகள் புதிர்கள் இடம்பெற இருக்கின்றன. வாரம் ஒரு முறை அல்லது குறைந்தது மாதம் இருமுறையாவது பரிசுகளும் வழங்க இருக்கிறோம்.

புதிய கருத்துக்களுக்கும், கற்பனை வளத்துக்கும் பல்வேறு சிந்தனைகளின் ஒருங்கிணைப்புக்கும் ஏற்றதாக இந்த தளத்தை கொண்டு செல்ல உங்களின் ஒத்துழைப்பை நாடுகின்றேன்.

முதல் கட்டமாக தளத்தை தயார் படுத்தி சிறப்பாக வெளிப் படுத்த இந்த போட்டியில் உங்கள் பங்களிப்புக்கு ஒரு போட்டி. இந்த தளத்துக்கு ஒரு நல்ல தலைப்புப் பெயர் மற்றும் டிஸ்க்ரிப்ஷன் சொல்லுங்க. தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புக்கு பரிசு உண்டு.

பார்த்தவுடன் கவர்வதாக நல்ல கிரியேட்டிவாக தலைப்பு இருக்க வேண்டும். நகைச்சுவையும் முயற்சிக்கலாம். உங்கள் கற்பனைகளை உடனே ஆரம்பிக்கலாம்...ரெடி..ஸ்டார்ட்...

Sunday, February 18, 2007

எனக்குத் தெரியாது!


ஆசிரியர்: ஏண்டா வீட்டுப் பாடம் செஞ்சிட்டு வரல்லே...கைய நீட்டுடா...

மாணவன்: ம்ஹூம் நான் நீட்ட மாட்டேன். எங்கப்பா கைநீட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு.

ஆசிரியர்: ஏண்டா? எதுக்காக அப்படிச் சொன்னாரு?

மாணவன்: நாம ரொம்ப மானமுள்ள குடும்பம். யாருகிட்டயும் கைநீட்டக் கூடாதுண்ணு எங்கப்பா எங்கிட்ட சொல்லியிருக்காரு.

-oOo-

மாணவன்: ஐயா...எங்க கிட்ட எப்பவும் கேள்வி கேக்கிறீங்களே? நாங்க உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா?

ஆசிரியர்: கண்டிப்பா கேட்கலாம். உங்க சந்தேகங்களை தீர்த்து வைக்கத் தானே நான் இருக்கேன்?

மாணவன்: சரி ஐயா! ஆனா எனக்குத் தெரியாதுன்னு மட்டும் சொல்லக் கூடாது!

ஆசிரியர்: என்னடா...எனக்குத் தெரியாத கேள்வி கேக்கப் போறியாக்கும்..அதெல்லாம் இல்ல. என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன். சந்தேகமா இருந்தா நாளைக்கு ரெபர் பண்ணியாவது உன்னோட கேள்விக்கு பதில் சொல்லுவேன். தயங்காம கேளுப்பா?

மாணவன் கேள்வியைக் கேட்டான். ஆனால் ஆசிரியர் எனக்குத் தெரியாது என்று தான் பதில் சொன்னார். அப்படியானால் மாணவன் என்ன கேள்வி கேட்டிருப்பான்?

Friday, February 16, 2007

மிளகாய் என்றால் என்ன?

து ஒரு எளிமையான போட்டி. இதற்கு பட்டி மன்ற விவாதமெல்லாம் தேவையில்லை. வெறும் பதிலே போதும்.

பதில்கள் போட்டி முடிவில்தான் வெளியிடப் படும். இங்க பதில் சொல்லீட்டு பிரதான பதிவில் (சிந்தாநதி)ஆஜர் மட்டும் கொடுத்திட்டுப் போகலாம். அங்கே பதில் சொன்னால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப் படமாட்டாது.

இந்தப் போட்டிக்கு பரிசெல்லாம் கிடையாது. ஆனால் பட்டம் உண்டு. கவனிச்சுகிட்டீங்களா?

போட்டி இதுதான்: இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

மிளகாய் என்றால் என்ன?
Wednesday, February 14, 2007

காதலர் தினம் - V

Image and video hosting by TinyPicகாதலர் தினம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பல இடங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. நீங்களும் அந்த விவாதத்தில் ஏற்கனவே பங்கேற்றிருப்பீர்கள். ஆனாலும் காதலர் தினத்திலேயே நடக்கும் இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டு நீங்கள் விவாதிப்பது ஒரு சுவையான நிகழ்வாக இருக்கக் கூடும்.

காதலர் தினம் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார யுக்தி என்பது உட்பட, காதலுக்கும் காதலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் தேவையா என்பது வரை விவாதங்கள் நடந்து வந்தாலும் காதலர் தினம் என்னவோ களை கட்டித்தான் வருகிறது.

காதலர் தின வலைப்பதிவுகளும் கடந்த வாரம் முதலே எழுதப் பட்டு வருகின்றன. இன்றும் ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன. எனவே காதலர் தின பட்டிமன்றத்தில் பங்கேற்று கருத்துக்களை சொல்லுங்கள்.

சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. அது பின்னர் அறிவிக்கப் படும்.

(இதோ அறிவிச்சாச்சு: அருமையான புத்தகங்கள் பரிசு. வழங்குபவர்: செந்தழல் ரவி)

விவாதத் தலைப்பு

காதலர் தினம்

தேவை / தேவையில்லை

வணக்கம்

தமிழ்