பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Sunday, February 18, 2007

எனக்குத் தெரியாது!


ஆசிரியர்: ஏண்டா வீட்டுப் பாடம் செஞ்சிட்டு வரல்லே...கைய நீட்டுடா...

மாணவன்: ம்ஹூம் நான் நீட்ட மாட்டேன். எங்கப்பா கைநீட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு.

ஆசிரியர்: ஏண்டா? எதுக்காக அப்படிச் சொன்னாரு?

மாணவன்: நாம ரொம்ப மானமுள்ள குடும்பம். யாருகிட்டயும் கைநீட்டக் கூடாதுண்ணு எங்கப்பா எங்கிட்ட சொல்லியிருக்காரு.

-oOo-

மாணவன்: ஐயா...எங்க கிட்ட எப்பவும் கேள்வி கேக்கிறீங்களே? நாங்க உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா?

ஆசிரியர்: கண்டிப்பா கேட்கலாம். உங்க சந்தேகங்களை தீர்த்து வைக்கத் தானே நான் இருக்கேன்?

மாணவன்: சரி ஐயா! ஆனா எனக்குத் தெரியாதுன்னு மட்டும் சொல்லக் கூடாது!

ஆசிரியர்: என்னடா...எனக்குத் தெரியாத கேள்வி கேக்கப் போறியாக்கும்..அதெல்லாம் இல்ல. என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன். சந்தேகமா இருந்தா நாளைக்கு ரெபர் பண்ணியாவது உன்னோட கேள்விக்கு பதில் சொல்லுவேன். தயங்காம கேளுப்பா?

மாணவன் கேள்வியைக் கேட்டான். ஆனால் ஆசிரியர் எனக்குத் தெரியாது என்று தான் பதில் சொன்னார். அப்படியானால் மாணவன் என்ன கேள்வி கேட்டிருப்பான்?

12 comments:

  1. நாமக்கல் சிபி said...

    நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை கொண்ட பதில் உங்களுக்குப் பிடிக்காது. அது என்ன வார்த்தை?

  2. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    i dont know அப்படின்னா என்ன அர்த்தம் சார்??

  3. சிறில் அலெக்ஸ் said...

    The student asked 'What's the meeaning of I don't know?'.

    :))

  4. மாசிலா said...

    'ஜன கன மன' தலைகீழ பாட தெரியுமா?

  5. மலைநாடான் said...

    தெரியும் என்பதற்கு, எதிர்பதம் என்ன? எனக்கேடடிருப்பான்

  6. நெல்லை சிவா said...

    தெரியும்-ங்கிறதுக்கு எதிர்பதம் எது?

  7. வல்லிசிம்ஹன் said...

    பையன் இந்தக் கேள்வியைக் கேட்டு இருப்பான்.''நான் என்ன கேள்வி கேக்கப் போறேன்னு உங்களுக்குத் தெரியுமா?''
    அப்படின்னு.

  8. SurveySan said...

    i don't know க்கு தமிழ்ல இன்னா சார் சொல்லணும்?

  9. Anonymous said...

    ஐ டோண்ட் நோ வுக்கு தமிழ்லே என்ன சார்?

  10. ✪சிந்தாநதி said...

    i don't know வுக்கு பொருள் கேட்பதுதான் சரியான பதில். தமிழ் கேட்பதும் ஏற்கலாம். வித்தியாசமான பதில்களைத் தந்த நாமக்கல் சிபி, வல்லி சிம்ஹன் பதில்களும் நல்லாத்தான் இருக்கு. நன்றி.

  11. SurveySan said...

    பரிசு இன்னா சார்?

    இப்படி அறிவ வளக்கர மாதிரி நிறைய போட்டி வைங்க சார் :)

  12. thaara said...

    whts the meaning of I DONT KNOW