பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Tuesday, February 27, 2007

அதிரடி பரிசுப் போட்டி-3

Image and video hosting by TinyPicலைப்புப் போட்டிக்கு எதிர்பார்த்த அளவு பதில்களும் வரவில்லை. எதிர்பார்த்த மாதிரி கேட்சிங் தலைப்பும் வாசகமும் கிடைக்கவில்லை.

தலைப்பும் டிஸ்கிரிப்ஷனும் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். ஆனால் அப்படி சரியாக எதுவும் வரவில்லை. மின்னஞ்சலில் அனானியாக வந்த ஒரு மடலில் இருந்த வாசகம் சில மாற்றங்களுடன் (பதில் தேடும் கேள்வி-பதிலைச் சொல்லுங்க பரிசை வெல்லுங்க) ஓரளவு திருப்தியானதாக தேர்வு செய்யப் படுகிறது. அனானி பரிசுக்கு பெயர், முகவரி தரவிரும்பாததாலோ என்னவோ பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நாங்கள் எதிர்பார்த்த நகைச்சுவையான ஒரு கேட்சிங் வாசகம் இன்னும் கிடைக்காத நிலையில் இந்தப் போட்டி தொடர்ந்து நிலவில் இருக்கும். நல்ல வாசகம், தலைப்பு இனியும் நீங்கள் அனுப்பலாம். நல்ல தலைப்பு, வாசகம் தேர்வு செய்யப் படும்போது பரிசு வழங்கப் படும்.

-oOo-

சரி..அதிருக்கட்டும். இன்றைய போட்டிக்கு வருவோம்.

புகழ்பெற்ற இணைய தளங்களான
கூகுள், யாகூ
இரண்டில் எது சிறந்தது? ஏன்?

இது பட்டிமன்ற விவாதம் போன்றதுதான். முன்னவர் பதில்களை மறுத்தும் நிரூபிக்க வேண்டும். அனுபவப்பூர்வமான சாதக பாதகங்களை எழுத முயலுங்கள். சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. வெற்றி பெறும் போட்டியாளர் வித்லோகா தளத்தில் இருந்து தேர்வு செய்யும் புத்தகம் பரிசாக வழங்கப் படும். இந்த வார பரிசை வழங்குபவர் சிறில் அலெக்ஸ்.


27 comments:

  1. பொன்ஸ்~~Poorna said...

    கூகிள் Vs யாஹூ என்பது இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி எதிர்ப்படும் கேள்வி.

    ஆனால், இதை எந்த விசயத்தில் ஒப்பிடச் சொல்கிறீர்கள் என்பது தான் புரியவில்லை.

    1. தேடுபொறி -
    பத்து வருடங்களுக்கு முன்னால், யாஹூ தேடு பொறி இருந்ததை விட இன்றைக்கு மிக மிகப் பின்னடைந்திருக்கிறது. அதே சமயத்தில், கூகிள் தேடுபொறி இன்னும் இன்னும் புகழ் பெற்றுக் கொண்டே போகிறது. தேடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், "கூகிள் செய்" என்று பயன்படுத்துமளவுக்கு கூகிள் புகழின் உச்சியில் இருக்கிறது.

    எந்த அலங்காரமும் விளம்பரமுமில்லாத கூகிளின் முகப்பே இதற்கு முக்கிய காரணம். ஒன்றும் தேடுவதற்கில்லாத நாட்களில் கூட, இன்றைக்குக் கூகிள் லோகோ எப்படி இருக்கிறது, ஏதும் புதுமை இருக்கிறதா என்று பார்க்கக் கூட நான் கூகிள் முகப்புக்கு அடிக்கடிப் போயிருக்கிறேன்.

    அந்த விதத்தில் தேடுபொறி என்ற அளவில் கூகிளுக்கே என் ஓட்டு

    2. மடல்சேவை:
    கூகிள் மடல் சேவை மற்றுமொரு புதுமை. பெட்டி பெட்டியாக பிரித்தடுக்கும் தபால் மடல்கள் வகை யாஹூ மடல் சேவைக்குப் பதிலாக, உங்களின் எந்த மடலையுமே அழிக்காமல் எல்லாவற்றையும் தனித்தனி குறிச்சொல்லுடன் பாதுகாக்க முடிவது இன்னும் வசதி. சிலசமயம், அலுவலக விவரங்களுடன், சொந்த விவரங்களும் பேசும் ஒரு மடல்தொடரைப் பொதுவாக, எதில் போட்டு சேகரிப்பது என்று தெரியாமல் இரண்டு பெட்டியிலும் ஆளுக்கொரு படிமம் சேமித்து இடமடைத்துக் கொண்டிருந்த எனக்கு, இந்த குறிச்சொல்லாக்கம் மிக மிக வசதியாக இருக்கிறது.

    இப்போதெல்லாம் யாஹூ மடல்களைத் திறக்கவே மனம் வருவதில்லை.

    3. குழுமங்கள்:
    யாஹூ குழுமங்கள் வந்த புதிதிலேயே அதில் குழுமங்களில் பங்கேற்றதுண்டு. ஆனால் கூகிள் குழுமங்களில் அவ்வளவு அதிகமாக பங்கேற்றதில்லை. குழுமங்களளப் பொறுத்தவரை பெரிதாக வேறுபாடுகள் தெரியவில்லை. யூனித்தமிழை அப்படியே தரும் விதத்தில் கூகிள் இன்னும் மனங்கவர்ந்த குழும சேவையாகவே இருக்கிறது

    4. ஒளிப்படச் சேவை:
    யாஹூ படச் சேவையில் இன்னும் என் படங்கள் பல இருக்கின்றன. ஆனால், கூகிளின் பிகாசா, வலையேற்றத்திற்கும் படங்களை மாற்றுவதற்கும் அதிக பயனுள்ள சேவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பயன்படுத்தியதில்லை..

    5. Instant messenger (உடனடித் தூதுச் சேவை?)
    யாஹூ தூதுவரை விட கூகிள் பேசு (ஜிடாக்) பார்வைக்கு இன்னும் அதிக அழகாக, சுலபமாக இருக்கிறது. தனி மென்பொருள்கள் இல்லாமலேயே மடல் ஜன்னலிலேயே பேசவும் முடிவது அதிக வசதி.
    ஆனாலும் ஒரே ஜன்னலில் பலருடன் பேசும் கான்பரன்ஸ் வசதியின்மை, சாட் அறைகள் இல்லாமை போன்ற குறைகள் யாஹூவை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இணையத்தில் இல்லாத போது அனுப்பப்படும் செய்திகளை மடலாகத் தரும் கூகிள் வழி ரொம்பவும் வசதி என்றாலும், நமக்கு வேண்டிய நண்பர்களை மட்டுமே நாம் தொடர்பு கொள்ள வழி வகுக்கும் ஆப்லைன் ஸ்டேடஸ் இன்மையும் கூகிளின் குறைப்பாடு தான்.

    6. ப்ரீப்கேஸ்
    யாஹூவில் எனக்கு அடுத்ததாகப் பிடித்த சேவை இந்த ப்ரீப்கேஸ். நம்முடைய பெட்டி என்று நமக்கு வேண்டியதையெல்லாம் அடுக்கிக் கொண்டு போகுமிடத்தில் எல்லாம் எடுத்துப் பார்க்க வழியாகும் இந்த பெட்டி, கூகிளில் கிடைப்பதில்லை. எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள துணை செய்யும் யாஹூவின் பெட்டி போல் இல்லாமல், வெறும் .doc, .rtf, .xls வகை கோப்புகளை மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது கூகிள். இன்னும் போகப் போக, இவையும் மாறி, zip, jpg போன்ற பல்வகை கோப்புகளும் இடம் கொடுத்தால், கூகிள் பெட்டியும் பயனுள்ளதாக உருமாறும். ஆனால், இப்படிப் பட்ட அதிக இடமடைக்கும் zip, jpg கோப்புகளை யாஹூவின் பெட்டியில் போடாமல், கூகிள் மடலிலேயே வைத்துக் கொள்வதும் சாத்தியம் தானே! அந்த வகையில் கூகிள் இந்தப் பிரச்சனையை அழகாக கையாண்டுவிட்டது என்று சொல்லி மன்னித்துவிட்டுவிடலாம்..

    மேலே சொன்ன சேவைகள் தவிர, செய்திகள், வரைபடங்கள், வலைபதிவுச் சேவைகள், கூகிள் வாசிப்பகம் என்று பல்வேறு துறைகளிலும் கூகிள், யாஹூவுக்கு ஒரு படி மேலே தான் இருக்கிறது.

    இணையத்தூதுவரைத் தவிர மற்ற எல்லாவிசயங்களிலும் கூகிளே என்னுடைய விருப்பம். பலருடைய விருப்பமும் அதுவாகவே இருப்பதனாலேயே, யாஹூவின் விளம்பரங்களை இப்போது நாம் தொலைக்காட்சிகளில் கூட பார்க்க வேண்டியதாகிக் கொண்டிருக்கிறது.

    என்ன சொல்லி என்ன, கூகிள் வழி தனிவழி :)

  2. சென்ஷி said...

    ம்ஹ்ம்..இனிமே என்னத்த சொல்றது அதான் அக்கா எல்லாத்தையும் அடுக்கிட்டாங்களே?
    :(
    சென்ஷி

  3. Hari said...

    Messenger, mail என்று பல சேவைகளை இருவரும் தருகின்றன. இருந்தபோதும், ஒரு மனிதனுக்கு அவன் வாழ்நாளில் தேடல் என்பது இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த தேடல் எது சம்பந்தபட்டதாகவும் இருக்கலாம். அது அனைத்திற்க்கும் பெரிதும் உதவுவது Google.

    மேலும், ஒரு தனி மனிதன் அவன் தன் சுற்றத்துடன், நண்பர்களுடன் கொண்டுள்ள உறவை என்றென்றும் தொடர Google தரும் சேவைகளுக்கு(Google Talk, Orkut)இணையாக தருபவர் யாருண்டு?

    நமது கோப்புகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமித்த பின்பு, இணையம் மூலமாக பலருடன் பங்கிட்டு கொள்ளவும்(Google Document,SpreadSheat) அதை உலகின் எந்த மூலையில் உள்ள போதும் அதை திருத்தவும் வசதிகள் தருவது வேறு யாருண்டு?

    நம் கணிணியிலுள்ள புகைப்படங்களை ஒரு சொடுக்கில் வலையேற்ற உதவி புரியும் மென்பொருளை(Picasa) தருபவர் வேறு யாருண்டு?

    ஆகவே, Google தான் சிறந்தது.

  4. சென்ஷி said...

    யக்கா, பொன்ஸ் அக்கா..
    googleங்கறது பணக்கார வீட்டு கல்யாணம் மாதிரி.. invitation கொடுத்தாத்தான் உள்ளே கூப்டும். ஆனா நம்ம yahoo mail சமபந்தி போஜனம்க்கா..
    எல்லோரையும் ஆசையோட கூப்ட்டு இடம் கொடுக்கும்...

    நீ ஆயிரம் சொல்லலாம் gtalkஐப் பத்தி..
    ஆனா அது நம்ம yahoo messenger ல இருக்குற மாதிரி வூடு கட்டி விளையாட இடம் இருக்கா..இல்லியே (chat rooms)
    உனக்கு புடிச்ச இடத்துல புடிச்ச நேரத்துல கடல போட கத்துக்கொடுத்த சாமிக்கா அது..

    இவ்வளவு ஏன்...நம்ம யாஹூ கத்துக்கொடுத்த yahoo groups டெக்னாலஜிதானேக்கா நம்ம blog item லாம்...

    இத்தனையும் மறந்துட்டு நீ புடிக்கலாம் googleக்கு கொடி..
    ஆனா இந்த தம்பி தடுப்பான் அத நீ மறந்துடகூடாதுக்கா....


    யாஹூவுக்காக டெல்லியிலிருந்து
    பாசமிகு தம்பி

    சென்ஷி

  5. சென்ஷி said...

    அக்கா...நாந்தாங்கா திரும்ம்பியும் வந்திருக்கேன்....

    //சிலசமயம், அலுவலக விவரங்களுடன், சொந்த விவரங்களும் பேசும் ஒரு மடல்தொடரைப் பொதுவாக, எதில் போட்டு சேகரிப்பது என்று தெரியாமல் இரண்டு பெட்டியிலும் ஆளுக்கொரு படிமம் சேமித்து இடமடைத்துக் கொண்டிருந்த எனக்கு, இந்த குறிச்சொல்லாக்கம் மிக மிக வசதியாக இருக்கிறது. //

    அக்கா...பொண்ணு பாக்கப்போறாப்போ கழுத்துல..கையில..காதுல எதுனா மாட்டியிருக்கான்னு பாக்குற காலம்க்கா இது..
    மொக்கையா நின்னா அவுங்க அம்மாவே அத திட்டும்..
    அதையேத்தான் யாஹூவும் செய்யுது.

    //பத்து வருடங்களுக்கு முன்னால், யாஹூ தேடு பொறி இருந்ததை விட இன்றைக்கு மிக மிகப் பின்னடைந்திருக்கிறது. அதே சமயத்தில், கூகிள் தேடுபொறி இன்னும் இன்னும் புகழ் பெற்றுக் கொண்டே போகிறது. தேடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், "கூகிள் செய்" என்று பயன்படுத்துமளவுக்கு கூகிள் புகழின் உச்சியில் இருக்கிறது.//

    பண்பாடுன்னு வாய் கிழிய பேசுறவங்களை இல்ல கத்துறவங்களை கேளுங்க...
    பழது தான் நல்லதுன்னு சொல்லுவாங்கக்கா...
    எந்த ஒரு பேரும் வாங்குறத விட கட்டிக்காப்பாத்துறதுதாங்க்கா கஷ்டம்..
    அன்னிலேந்து இன்னிவரைக்கும் பழச மறக்காம மாத்தாம இருக்குற யாஹூவ பாத்தா உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்காதுதான். என்ன பண்றது.. :)


    //ப்ரீப்கேஸ்
    யாஹூவில் எனக்கு அடுத்ததாகப் பிடித்த சேவை இந்த ப்ரீப்கேஸ். நம்முடைய பெட்டி என்று நமக்கு வேண்டியதையெல்லாம் அடுக்கிக் கொண்டு போகுமிடத்தில் எல்லாம் எடுத்துப் பார்க்க வழியாகும் இந்த பெட்டி, கூகிளில் கிடைப்பதில்லை. எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள துணை செய்யும் யாஹூவின் பெட்டி போல் இல்லாமல், வெறும் .doc, .rtf, .xls வகை கோப்புகளை மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது கூகிள். இன்னும் போகப் போக, இவையும் மாறி, zip, jpg போன்ற பல்வகை கோப்புகளும் இடம் கொடுத்தால், கூகிள் பெட்டியும் பயனுள்ளதாக உருமாறும். ஆனால், இப்படிப் பட்ட அதிக இடமடைக்கும் zip, jpg கோப்புகளை யாஹூவின் பெட்டியில் போடாமல், கூகிள் மடலிலேயே வைத்துக் கொள்வதும் சாத்தியம் தானே! அந்த வகையில் கூகிள் இந்தப் பிரச்சனையை அழகாக கையாண்டுவிட்டது என்று சொல்லி மன்னித்துவிட்டுவிடலாம்..//

    இப்பத்தான் நீ உண்மைய பேசுறேக்கா..
    வீட்ல பீரோ இருக்குங்கறதுக்காக பல்பொடி, பிரஷ், பேஸ்ட், சோப் எல்லாம் அதுல வைக்க கூடாது. அததுக்கு ஒரு இடம் கொடுத்து வைக்கிறது யாஹூதான்க்கா...

    //செய்திகள், வரைபடங்கள், வலைபதிவுச் சேவைகள், கூகிள் வாசிப்பகம் என்று பல்வேறு துறைகளிலும் கூகிள், யாஹூவுக்கு ஒரு படி மேலே தான் இருக்கிறது.//

    உசரமா இருக்கறவங்க மட்டும்தான் பெரியவங்கன்னா மத்தவங்களை நாம என்னக்கா சொல்றது...

    சும்மா படம் காட்டுறதுக்காக கூகிள் எல்லாத்தையும் காட்டலாம். ஆனா வரைபடம் தெரியுதேன்னு அதுல ரஜினி படம் பாக்க முடியுமா.. இல்ல போலியபத்தித்தான் விசாரிக்க முடியுமா? :)

    //யாஹூவின் விளம்பரங்களை இப்போது நாம் தொலைக்காட்சிகளில் கூட பார்க்க வேண்டியதாகிக் கொண்டிருக்கிறது.//

    பொண்ணுங்க மனச தெரிஞ்சது யாஹூக்கா. அதான் டிவியில் வருது :)

    கூகிள் வழி வேணா தனி வழியா இருக்கலாம்க்கா...
    ஆனா யாஹூ வழி என்னிக்குமே நேர் வழி...
    அதாவது என்னை மாதிரி ஆளுங்க வழி :)


    மீண்டும் டெல்லியிலிருந்து யாஹூவுக்காக
    அன்புத் தம்பி
    சென்ஷி

  6. Yogi said...

    இன்னுமொரு முக்கியமான சேவை கூகுள் உலகம் (Google Earth). நமக்காக நமது ஊர்களை செயற்கைக்கோள்களிலிருந்து படம் பிடித்துத் தருகிறதே.

  7. பொன்ஸ்~~Poorna said...

    சென்ஷி தம்பி,
    //googleங்கறது பணக்கார வீட்டு கல்யாணம் மாதிரி.. invitation கொடுத்தாத்தான் உள்ளே கூப்டும். //
    இல்லப்பா. இல்ல.. சோதனை நிலையில் இருந்ததால இத்தனி நாள் இன்விடேசன் கேட்டாங்க. இனிமே அப்ப்டி இல்லை.. வேணுங்கிறவங்க, அவங்கவங்களே கூகிள் மெயில் கணக்கு திறந்துக்கலாம்..

    யாஹூவின் பலம், அதன் சாட் ரூம்களும், ப்ரீப்கேஸும் தான். ஆனால், ப்ரீப்கேஸ் அவ்வளவாக இடம் பத்தாதே. அந்த வகையிலும் கூகிள் மெயில் வசதி தான். அப்புறம், சாட். தமிழூற்று மாஹிர் கூகிளுக்கும் சாட் மென்பொருள் உருவாக்கிவிட்டார்.. :) இன்னும் கொஞ்ச நாளில் கூகிளிலும் நீங்கள் சாவதானமாக கடலை போடலாம் :)))

  8. சென்ஷி said...

    சரி..சீரியஸா கொஞ்சம் எது பெஸ்ட்ன்னு பாக்கலாம்ன்னா..
    நான் 2000த்துல யாஹூ அகௌண்ட் ஆரம்பிச்சேன். அன்னிலேந்து இன்னிவரைக்கும் அதுல தான் பொழப்பு ஓடுது. gmail நான் ப்ளாக் வந்தப்புறம்தான் பழக்கம்.
    யாஹூ இந்தியாவுல லேட்டஸ்ட் நியுஸ், கிரிக்கெட், பங்குவணிகம் எல்லாமே அப்பப்ப அப்டேட் ஆகிடும். அந்த வசதி எல்லாமே கூகிள்ல இருந்தாலும் ஒரே எடத்துல இல்லைங்கறது கஷ்டமான ஒண்ணு..
    அதாவது நான் என்னோட மெயில login பண்ணிட்டு யாஹூவுல எந்த வேல பாத்தாலும் அது அலர்ட் கொடுக்கும். இது கூகிள்ல்ல டூல்பார் இருந்தா மட்டும் சாத்தியம்.
    அது மட்டுமில்லாம கூகிள் டூல் பார் install பண்றவங்களுக்கு ஒரு யாஹூக்குள்ள போறதுக்கு ஒரு தொல்லை வருல். pop up block பண்ணிடும். நான் இத நிறைய அனுபவிச்சாச்சு. இந்த தொல்லை யாஹூல இல்லை.
    பீட்டாவோட உபயோகமும் அதிகம். ஸ்டைல் ரொம்ப பிடிச்சுருக்கு...
    புதுசு பீட்டா பிடிக்கலைன்னா பழசாவே இருக்கவும் ஆப்ஷன் இருக்கு. யாஹூவுல வர்ற விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சினிமா, விளையாட்டு, எல்லாத்தையும் அழகா அனிமேட் பண்ணி காட்டுவாங்க.
    வேற...ரொம்ப நாள் பழகின நண்பன் மாதிரி இருக்கறதால என்னால யாஹூவ எதிர்க்க முடியல.

    சென்ஷி

  9. சென்ஷி said...

    //தேடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், "கூகிள் செய்" என்று பயன்படுத்துமளவுக்கு கூகிள் புகழின் உச்சியில் இருக்கிறது.//

    உண்மைதான்..
    ஆனால் அதே போல் மெயில் என்பதற்கும் அநேகர் யாஹூவைத்தான் சொல்வர்.

  10. சென்ஷி said...

    //பொன்வண்டு said...

    இன்னுமொரு முக்கியமான சேவை கூகுள் உலகம் (Google Earth). நமக்காக நமது ஊர்களை செயற்கைக்கோள்களிலிருந்து படம் பிடித்துத் தருகிறதே.//

    அது நேரடியான நிகழ்வு அல்ல..
    net connection இல்லாவிட்டால் இதனை பார்க்க முடியாது.
    மேலும் அத்தனை புகைப்படங்களும் ஏற்கனவே பதிய வைக்கப்பட்டவை போலவே எனக்கு படுகிறது.

    சென்ஷி

  11. Yogi said...

    நம்முடைய கடைசி பத்து தேடல்களை சேமித்து வைக்கும் வசதி இதில் உள்ளது.

    // net connection இல்லாவிட்டால் இதனை பார்க்க முடியாது. //

    net connection இல்லாவிட்டால் நீங்கள் yahooவும் தான் பார்க்க முடியாது. :)))

  12. சென்ஷி said...

    //நம்முடைய கடைசி பத்து தேடல்களை சேமித்து வைக்கும் வசதி இதில் உள்ளது.//

    அட நீங்க வேற...
    என் ஆபீசுல கூகிள்ல தேடினதை எப்படி அழிக்குறதுன்னு எல்லோரும் என்கிட்டதான் கேப்பாங்க. அதுல இது ஒரு தொல்லைதானே தவிர + கிடையாது. யாஹூல வெறும் clear பண்ணா போயிடும்.

    எப்படி அழிப்பது என அறிய தனிமடல் அனுப்புங்கள் :)

  13. பொன்ஸ்~~Poorna said...

    இணைய இணைப்பைப் பற்றிப் பேசும்போது, கூகிளில் ஒரு மடலைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே, அது ஐந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நம் மடலைச் சேமித்துக் கொண்டே இருக்கும்.

    யாஹூவில் அது இல்லை. இடையில் இணைப்பு போனால் போனது தான்..

    கூகிளில் உங்களின் தன்வயப்படுத்தப்பட்ட முகப்பில் நியூஸைப் பார்க்க முடியும். உங்கள் மடலுக்கே வந்து இடத்தை அடைக்காமல், கூகிள் வாசிப்பகத்தில் வேண்டிய செய்தி, அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு என்று வகை பிரித்து வாசிக்க முடியும்.

    கூகிள் டூல் பாரின் புது ஜன்னல் திறக்காமல் காக்கும் உத்தியைப் பலரும் விரும்புகிறார்கள். அனாவசிய விளம்பரங்களைப் பார்க்காமல் தடுக்க இது ஒரு அற்புதமான வழி..

    யாஹூ பீட்டாவுக்குக் கொஞ்ச நாள் மாறி இருந்தேன். வீட்டில் அகலப் பட்டை தொடர்பிலேயே, பீட்டாவைக் காண மிகச் சிரமமாக இருக்கவும், பழைய யாஹூவுக்கு மாறிவிட்டேன்!.

    சென்ஷி, யாஹூவின் விளம்பரங்கள் பார்க்குமளவுக்கு எனக்கு மோகமில்லை :) அதே சமயம், கூகிளின் தொடர்புள்ள விளம்பரங்கள், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் மடல்/செய்திக்குத் தக்க, தொடர்புள்ள விளம்பரங்கள் உங்கள் பக்கப் பட்டியில் தெரியும். அத்துடன், மேலே, உங்களுக்கு விருப்பமான இடங்களிலிருந்து புதுச் சுட்டிகள் காட்டவும் வழியிருக்கே!

  14. சென்ஷி said...

    சரிக்கா...
    இப்படி நாம ரெண்டு பேருமே மாறி மாறி கதைச்சுட்டுருந்தா மத்தவங்க என்ன சொல்றதுக்கு இருக்கு..
    அதுக்காத இப்பத்திக்கி நான் அப்பிட்டு..
    திரும்பி யாராச்சும் கூகிள்-ஐப்பத்தி கதைச்சா அப்ப வர்றேன்.


    சென்ஷி

  15. Anonymous said...

    There are certain things Mani cant answer. For everything else - search Google.

  16. சென்ஷி said...

    சோதனைக்காக....

  17. ரவி said...

    எனக்கு என்னம்மோ பொன்ஸ் ஷேவக் மாதிரி அடிச்சு ஆடி கெலிச்சுட்டாங்கன்னு தோனுது. பரிசை அறிவியுங்கப்பா.

  18. சுதாகர் said...

    தமிழில் எழுத நேரமின்மையால் ஆங்கிலத்தில். மன்னிக்கவும்.
    My Short comments on this:

    1. Search Engine
    In Yahoo - Speed, accuracy are not in good level.

    In Google - Speed, accuracy are in good level and we can findout the results within first 20 lists. You can store your search history and you can findout visited website URL-s after one year. This will be helpful for many of them especially for IT peopeles & researchers. This option is missing in Yahoo. You can personalize your search based on your interest.

    2. Mail
    Yahoo - New Yahoo beta is taking loooong time to display even in broadbrand. If you open 3 or 4 mails at a time, the browser will take so much time to respond.

    GMail - It looks fine and we can customize our views and no need to move/drag the mails from one folder to another one. You can label the mail as many you can. Now, it is free to everybody. And, you can store upto 2.8 GB.

    3. Messenger
    Yahoo - Yahoo is having very fantastic features as Video Chat, Conference calls and Chat room. As far I know, Chat rooms are used by the people who likes fun and all...
    Quality of Video & conference is not good as skype (Google is promoting skype by their Google Pack). If you have any connection problem, your ID will be in "Online" only instead of "Offline".

    G-Talk - The installation software is very small and very convenient to use. You can store the chat history if you want. This will be really helpful for the people those are using it for their work. If you have any connection problem, your status will automatically change to offline. And, we can expect Video chat & conference call from G-Talk very soon.

    4. Blogg
    Yahoo 360 - It is not having good templates and very hard to understand and browse. I never used and came across this.

    Blogger - This is really good and it is having lot of features (I'm the new one to use this).

    5. Briefcase
    Yahoo - Yahoo is having a good storage option to store any files. But, the size is very small.

    Google doesn't have anything like this.

    6. Online Document editor
    Yahoo - I dont' think yahoo is having a Online document editor.

    Google - Google's Docs & Spreadsheets is having many features like to store the old version files and you can share the document some other Google ID.

    7. Toolbar
    Yahoo - Yahoo is having the toolbar which is taking more time to load the options for the user comparing to Google.

    Google - Google toolbar is really nice one which I am currently using for around 1.5 years which never give me the problem.

    8. Desktop Search
    Yahoo - I don't think Yahoo is having a desktop search software.

    Google - Google Desktop search is really nice one and you can share the same across the network and company. It is having lot of features which will automatically take the backup of your files versions.

    9. Maps
    Yahoo - Yahoo is having the Maps which is having very limited features and it is not having the good User Interface. We can't able to search the place based on the Postcode.

    Google - Google map is very convenient to the user, very simple, fast and accuracy. You can search the places and find out the nearest business locations. It is also having downloadable software called Google Earth.

    10. Photo Editor
    Yahoo - Yahoo is having the online photo editor and you can share your album. You need to edit your photos after uploading them.

    Picasa- Google is having the software, Picase, which we can use to edit the photos, orgainse and create the web album. It is having very nice features to edit/organize the photos within very simple steps.

    11. Video
    Yahoo - Yahoo is having a good database collection of the video from the users.

    Google Video & YouTube - Google Video & YouTube are having very large collection of the video from their users and very convenient to see this than Yahoo video..

    And, the other features like print.google.com, book search, scholer search, I can say.. I LOVE GOOGLE...

    So, as far as my comment, I can go for Google, ALWAYS... :-)

  19. சுதாகர் said...

    Add, these too...

    12. News
    Yahoo - Yahoo is getting the news from the other News website agencies. We can customize the news display as per our interest.

    Google - Google is also getting the nes from the other news website agencies. But, they are giving a customized news display as per your interest (means based on your previous news clicks & search history). I believe this is very useful comparing to Yahoo News.

    13. Calendar
    Yahoo - Yahoo is having many features and the look and feel is very old.

    Google - Google calendar is a nice one you can customize the view as per your interest. It is not taking much time and it is not refreshing everytime. That is very nice to see.

    14. Groups
    Yahoo - Yahoo is having the very large group and both are having many similiar options.

    Google - You can easily navigate thru' the groups section without having any hazzle, and you can see the updates on your recently visited groups activities and you can customize this too....

  20. Boston Bala said...

    இந்த எம்.எஸ்.என் லைவ் என்று ஒன்று இருக்கிறதாமே... யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா?

  21. ✪சிந்தாநதி said...

    போட்டி ஏற்கனவே நடுவருக்கு அனுப்பப் பட்டு விட்டது. நடுவர் பரிசு பெறும் போட்டியாளரை அறிவிப்பார்.

    ===
    @சுதாகர் அழகாக அடுக்கி இருக்கிறீர்கள்.

    இந்த பதிவு tamiltalk என்பதாலும் உங்கள் பதில் வருவதற்கு முன்பே நடுவருக்கு அனுப்பப் பட்டு விட்டதாலும் இது போட்டிக்கு இணைக்கப் படமாட்டாது. தயவு செய்து தமிழில் மட்டுமே போட்டிக்கான படைப்புகளை தாருங்கள். எனினும் மிகவும் சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ===

    யாருமே யாகூ ரொம்ப நாளாவும் இப்போ கூகிளும் தருகிற இணையப் பக்கம் உருவாக்கும் வசதியான yahoo geocities மற்றும் google pages பத்தி சொல்லவேயில்லையே ஏன்?

  22. Boston Bala said...

    ஈ - தமிழ்: Google vs Yahoo: TamilTalk Contest Results

  23. ✪சிந்தாநதி said...

    தமிழ்மணத்த்தில் பின்னூட்ட எண்ணிக்கை காட்டப் படவில்லை போல இருக்கு...

  24. சுப.செந்தில் said...

    Nice competition..

  25. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    பொன்ஸ் மற்றும் சென்ஷியின் வாதங்கள்
    சுவாரசியமாக இருந்தது.
    வெற்றி பெற்ற பொன்ஸ்க்கு வாழ்த்துக்கள்.மங்கை அவர்களும் வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்கள்

  26. அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

    நல்ல தலைப்பு. பெரிசா கருத்து சொல்ல விரும்பல..

    ஆனா, நம்ம ஓட்டு கூகுளுக்கு தான் :)

  27. ✪சிந்தாநதி said...

    மறுமொழி திரட்டல் சோதனை!