
தலைப்பும் டிஸ்கிரிப்ஷனும் தாருங்கள் என்று கேட்டிருந்தோம். ஆனால் அப்படி சரியாக எதுவும் வரவில்லை. மின்னஞ்சலில் அனானியாக வந்த ஒரு மடலில் இருந்த வாசகம் சில மாற்றங்களுடன் (பதில் தேடும் கேள்வி-பதிலைச் சொல்லுங்க பரிசை வெல்லுங்க) ஓரளவு திருப்தியானதாக தேர்வு செய்யப் படுகிறது. அனானி பரிசுக்கு பெயர், முகவரி தரவிரும்பாததாலோ என்னவோ பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
நாங்கள் எதிர்பார்த்த நகைச்சுவையான ஒரு கேட்சிங் வாசகம் இன்னும் கிடைக்காத நிலையில் இந்தப் போட்டி தொடர்ந்து நிலவில் இருக்கும். நல்ல வாசகம், தலைப்பு இனியும் நீங்கள் அனுப்பலாம். நல்ல தலைப்பு, வாசகம் தேர்வு செய்யப் படும்போது பரிசு வழங்கப் படும்.
-oOo-
சரி..அதிருக்கட்டும். இன்றைய போட்டிக்கு வருவோம்.
புகழ்பெற்ற இணைய தளங்களான
கூகுள், யாகூ
இரண்டில் எது சிறந்தது? ஏன்?
இது பட்டிமன்ற விவாதம் போன்றதுதான். முன்னவர் பதில்களை மறுத்தும் நிரூபிக்க வேண்டும். அனுபவப்பூர்வமான சாதக பாதகங்களை எழுத முயலுங்கள். சிறந்த விவாதக் கருத்துக்கு பரிசு உண்டு. வெற்றி பெறும் போட்டியாளர் வித்லோகா தளத்தில் இருந்து தேர்வு செய்யும் புத்தகம் பரிசாக வழங்கப் படும். இந்த வார பரிசை வழங்குபவர் சிறில் அலெக்ஸ்.