பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Friday, February 16, 2007

மிளகாய் என்றால் என்ன?

து ஒரு எளிமையான போட்டி. இதற்கு பட்டி மன்ற விவாதமெல்லாம் தேவையில்லை. வெறும் பதிலே போதும்.

பதில்கள் போட்டி முடிவில்தான் வெளியிடப் படும். இங்க பதில் சொல்லீட்டு பிரதான பதிவில் (சிந்தாநதி)ஆஜர் மட்டும் கொடுத்திட்டுப் போகலாம். அங்கே பதில் சொன்னால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப் படமாட்டாது.

இந்தப் போட்டிக்கு பரிசெல்லாம் கிடையாது. ஆனால் பட்டம் உண்டு. கவனிச்சுகிட்டீங்களா?

போட்டி இதுதான்: இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

மிளகாய் என்றால் என்ன?




19 comments:

  1. பொன்ஸ்~~Poorna said...

    மிளகாய் ஒரு ஸ்பைஸ். அதாவது ருசி சேர்ப்பான்.

    செவ்விந்தியர்கள் அறிமுகப் படுத்தியதாமே!

  2. சிவபாலன் said...

    அப்ப்ப்பா இது மாதிரி ஒரு கடினமான கேள்வியை இதுவரைக்கும் என்னிடம் யாரும் கேட்டதில்லை..

    கண்களில் ஆனந்த கண்ணீர்..

    பதில் : அதாங்க மிளகாய்..

  3. MSATHIA said...

    மிளகாய் என்றால் அமிர்தம்.
    அதிகமா சாப்பிட்டு திட்டின மிளகாய, நான் இருக்கற அமரிக்காவின் அசாமில(வடகிழக்குங்க..) ஒரு 6 மாசம் உப்பு சப்பில்லாம காரமே இல்லாம சாப்பிட்டுட்டு நம்ம ஊரு மார்க்கட்டுல மொத்தாமா பாத்துட்டு (ஆனந்தக்)கண்ணீர் விட கடைக்காரார் இந்தாளுக்கு பாத்தாலே கண்ணீர் வர்ற அளவுக்கு காரமான மிளகாய்னு marketing பணணின கூத்தெல்லாம் நடந்தா தான் தெரியும் நான் என்ன சொல்றேன்னு.

  4. ஷைலஜா said...

    சிந்தாநதி...இந்த 'சிவ்' னு கோபிச்சிகிற பார்ட்டிக்கு நாங்க மிளகாய் னு பேர்வைப்போம்!
    நிங்க நிஜமாவே இங்க படத்துல இருக்க்ற சிவப்பு மிளகாய்பத்தி கேட்டிங்கன்னா அதுக்கு பதில் ஏதோ வித்தியாசமா எதிர்பார்க்கிறீங்கபோல இருக்கு..வெயிட்டீஸ் யோசிச்சி சொல்றேன்
    ஷைலஜா

  5. அகில் பூங்குன்றன் said...

    காந்தல் சுவையின் அரசி = மிளகாய்= என்னவளின் இதழ்கள்

  6. அகில் பூங்குன்றன் said...

    காந்தல் சுவையின் அரசி = மிளகாய்= என்னவளின் இதழ்கள்

  7. கதிர் said...

    எனக்கு தெரிஞ்சி முக்காவாசி தெலுங்கு டப்பிங் படத்துல ஒரு வசனம் வரும்.

    என்னடா உண்மைய சொன்னா பின்னாடி மிளகா வெச்ச மாதிரி இருக்கா?

    அப்படின்னு வில்லன பாத்து ராஜசேகர் கேப்பாரு.

    தமிழ்படத்துல அலைபாயுதேல காதல் மயக்கத்துல ஷாலினி மிளகாய கடிப்பாரு.

    தூளு தூளு தூளு மொளகாத்தூளுன்னு பார்த்திபன் ஒரு பாட்டே பாடி இருக்காரு.

    பெண்கள் அவங்க கைப்பையில் அவசியம் ஒரு பாக்கெட் வெச்சிக்கறது பெட்டர்.

  8. சிறில் அலெக்ஸ் said...

    கடித்துப்பார் புரியும்

  9. MyFriend said...

    மிளகாய் என்றால் chilli
    chilli என்றால் மிளகாய்

    Capsicum என்ற செடியின் முளைப்பது.

    இந்தியர்கள் வாழ்விலும் உணவிலும் சர்வ சாதாரண விஷயமாயிற்று..

    காரம்ன்னா மிளகாய்..
    கோபம்னா மிளகாய்..
    டென்ஷன்னா மிளகாய்..ன்னு பலர் பல மாதிரி குறிப்பிடுகிறார்கள்.

    நானும் மிளகாய் இல்லாத உணவு சாப்பிடுவதே இல்லை.. :-P

  10. நாமக்கல் சிபி said...

    ஹிஹி மிளகாய்னா மிளகாய்தான்.

    (அஜக்குன்னா அஜக்குத்தான், குமுக்குன்னா குமுக்குதான்)

  11. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    "மிளகாய் மிளகாய்" ன்னா காரம் காரம்ன்னு அர்த்தம்.
    அப்படித்தான் மிளகாய கடிச்சா என் பொண்ணு கத்துவா.
    எங்கவீட்டுல மிளகாய் ன்னா வரமிளகா அதாவது காஞ்ச மிளகா.இன்னோன்னு இருக்கே அத பச்சை மிளகாய் அப்படின்னு சொல்லுவோம்.
    இங்க நீங்க படத்தில் போட்டு இருக்கிறது மிளகாய் பழம்(காம்பு பச்சையா இருக்கே). கிளிதான்
    சாப்பிடும்.

  12. Radha Sriram said...

    மிளகாய்ன்னா - chilli,

    ஆனா குடைமிளகாய்ன்னா- bell
    pepper

    so மிளகாயும் pepper வகையோட சேந்தது.மிளகாயில் மட்டுமே maximum varieties உள்ளது.EX: (thai chillies,jalepenos,பஜ்ஜி மிளகாய் etc!!)

    (போதும்.....இதுக்கு மேல மூளைய weekendல use பண்ணினா தப்பு)!!!

  13. Anonymous said...

    இந்த மாதிரி chilly கேள்விக்கெல்லாம் என்னால chillyத்தனமாக பதில் சொல்ல முடியாது.

    E.Sankar dubai

  14. sankar dubai said...
    This comment has been removed by the author.
  15. sankar said...

    இது கோபத்தின் அடையாளம் என நினைக்கிறேன்

  16. sankar dubai said...

    கோபத்தின் அடையாளம்

  17. ✪சிந்தாநதி said...

    விடை இங்க இருக்கு

  18. Anonymous said...

    Hot Chilli? SEXY GIRLS

  19. NAGARJOON said...

    Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Corporate English classes in Chennai
    Communicative English training center
    English training for corporates
    Spoken English training
    Workplace Business English training institute
    Workplace English training for corporates
    Workplace soft skills training institutes
    Corporate language classes
    Business English training for Workplace