பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Friday, February 22, 2008

கணினி ஓவியப்போட்டி முடிவுகள்

போட்டி நடந்து வெகுநாட்களாகி முடிவுகள் அறிவிக்க மிகத் தாமதமாகி விட்ட நிலையில் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு ஓவிய ஆசிரியரான நண்பர் உதவியுடன் முதற்கட்ட தேர்வு நடந்தது.

போட்டிக்கு படைப்புகள் வரவர பார்த்திருந்த போதும் தேர்வுக்கென பார்வையிட்ட போது பதிவர்களின் படைப்புத் திறன் மிக வியக்க வைத்தது. எதிர்பாராத எல்லைகளைத் தொட்டிருந்தன பல படங்கள். எதை எடுப்பது எதைவிடுவது என்பது மிகுந்த சிரமமானதாக தோன்றியது. என்றாலும் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துதானே ஆக வேண்டும்?


எனவே

பொருத்தமான வண்ணக் கோவை.
ஓவியத் தன்மை
நுட்பத்திறன் அதிகபட்சம் பயன்படுத்தப் பட்டிருத்தல்
தலைப்பு (தீம்) பொருத்தம்

என்ற அடிப்படையில் ஓவியங்கள் தரம்பிரிக்கப் பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளை நிறைவு செய்த ஓவியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. பின்னர் அதிலும் அதிக மதிப்பெண் பெற்றவை தேர்ந்தெடுக்கப் பட்டன.

இறுதிக் கட்டத்தில்

ஒரு அறையின் காட்சியை தத்ரூபமாக கண்முன்னே நிறுத்திய சுஜா கணபதியின் ஓவியம் முதல் பரிசு பெறுகிறது. நுட்பத் திறனையும் வண்ணச் சேர்க்கையையும் அதிக பட்சம் சிறப்பாகப் பயன்படுத்திய ஓவியம் இது.

பல படங்கள் நெருக்கமான போட்டியைத் தந்தாலும் காற்றிலாடும் திரைச்சீலை இந்தப் படத்துக்கு உயிரோட்டத்தை தந்து அறையின் மதிப்பை உயர்த்தி விட்டது.

வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு: இதற்கு அடுத்தநிலையில் ... வவ்வாலின் கோயில் குளம் ஒரு தத்ரூப ஓவியமாக வந்திருக்க சாத்தியமுள்ளது. ஆனால் சிறிய கணிதப் பிழையால் சில கோணங்கள் அதிக சாய்வை அடைந்துள்ளதும் வெள்ளை வெற்றிடமும் இப்பட்த்தை இறுதிக் கட்டத்தில் நிராகரிக்க காரணமாயின.

தேடல், அல்லிக்குளம், glass போன்றவையும் நெருக்கமான போட்டியைத் தந்தவற்றில் சில...

போட்டி விவரம்

9 comments:

 1. கயல்விழி முத்துலெட்சுமி said...

  நல்ல படம் தான்.. சுஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 2. சேதுக்கரசி said...

  அருமையான படம். வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்.

 3. SurveySan said...

  very good selection.

  window curtain is really amazing.

 4. சதங்கா (Sathanga) said...

  காலதாமதம் என்றாலும், முடிவுகள் அறிவித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. கஜா வுக்கு வாழ்த்துக்கள். வித்தியாசமான அருமையான படம்.

  நெருக்கமா போட்டி தந்திருக்கிறோமென்பதில் சந்தோசம். எல்லாத்துக்கும் சுட்டி தந்தால் நன்றாய் இருக்கும்.

 5. சேதுக்கரசி said...

  //எல்லாத்துக்கும் சுட்டி தந்தால் நன்றாய் இருக்கும்.//

  ரிப்பீட்டேய்...

 6. Anonymous said...

  Thank You. Long awaited results.

  Chandra

 7. Bogy.in said...

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

 8. www.bogy.in said...

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

 9. karthik sekar said...

  நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்

  ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்