பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Thursday, March 29, 2007

அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த வாரம் கிரிக்கெட் தொடர்பாக போட்டி வைக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். ஆனால் இந்திய அணி மண்ணைக் கவ்விய சோகத்தில் நாங்கள் நினைத்திருந்த கிரிக்கெட் தலைப்புகள் எல்லாம் வீணாகிப் போய் விட்டன. எதையாவது விவாதிக்கச் சொன்னால் எங்களையே கிழிச்சி தோரணம் கட்டிடுவீங்களோன்னு பயம் வேற... ;)

அதனால் உங்க கோபத்துக்கு வடிகாலாகவும் உங்க கற்பனைக்கு தூண்டுதலாகவும் ஒரு போட்டி.

இந்த சந்தர்ப்பத்தில் (அ)சந்தர்ப்பவசமாக இந்திய கிரிக்கெட் வீர்ர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சந்திப்பது யாரை என்று கூறி கற்பனை உரையாடலை எழுதுங்கள். சிறந்த கற்பனைக்கு (புத்தகப்) பரிசு உண்டு


10 comments:

 1. மணிகண்டன் said...

  போட்டிக்கான கடைசி தேதி, விதிமுறைகள்னு எதாவது இருக்குதாங்க?

 2. சென்ஷி said...

  சும்மா நானும் இருக்கேங்கறதுக்காக இந்த பின்னூட்ட கயம்மை :)

  சென்ஷி

 3. ✪சிந்தாநதி said...

  சனிக்கிழமை இந்திய நேரம் பகல் 12 மணிவரை வரும் படைப்புகள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப் படும்.

 4. ✪சிந்தாநதி said...

  நாகரிகம் மீறாத நக்கல் இருக்கலாம் ;)

 5. ✪சிந்தாநதி said...

  கிரிக்கெட் என்றவுடன் எல்லோரும் ஓடிட்டாங்கப்பா ;)

 6. Boston Bala said...

  போட்டி தேதியை செவ்வாய் வரை நீட்டிக்க முடியுமா?

 7. ✪சிந்தாநதி said...

  நீட்டிச்சிருவோம் :)

 8. Dubukku said...

  தேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன் நன்றி.
  http://www.desipundit.com/2007/04/02/thadaladi/

 9. உண்மைத் தமிழன் said...

  அன்பு சிந்தாநதியாரே.. நான் இன்றைக்குத்தான் இந்த வலைத்தளத்திற்குள் நுழைந்தேன். தமிழ்மணத்தில் எனது தளம் நுழைந்த பிறகுதான் அடுத்தப் பதிவு என்றிருந்த எனது வைராக்கியத்தை உடைத்தெறிந்துவிட்டது இந்த தடாலடி போட்டி. அதான் நானும் குதிச்சிட்டேன். போட்டிக்கான எனது கற்பனை பேட்டியை எனது தளத்தில் http://truetamilans.blogspot.com இட்டுள்ளேன்.. 'எதுக்காச்சும்' தேறுமான்னு முடிவு பண்ணி கருத்தைச் சொல்லுங்க..

 10. ✪சிந்தாநதி said...

  உண்மைத் தமிழனின்

  http://truetamilans.blogspot.com/2007/04/blog-post.html

  இந்தப் பதிவு போட்டிக்கான படைப்பாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

  போட்டி இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கப் படுகிறது.