பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Monday, July 23, 2007

கணினி ஓவியப் போட்டி!

சிறப்பான காதல் கவிதைகளை எழுதி இணையக் கவிஞர்கள் பங்கேற்ற காதல் கவிதைப் போட்டி இனிதே நிறைவுற்று (முடிவுகள் அறிவிக்க சற்று தாமதம் நேர்ந்த போதும்) பிரசன்னா (குறைகுடம்) எழுதிய கவிதை பரிசுக்குரியதாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

விதிமுறைகள் காரணமாக சில நல்ல கவிதைகளும் வடிகட்டப் பட்டிருக்கலாம். எனினும் நல்ல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தமைக்கு முதலாவதாக கவிஞர்களுக்கு நன்றி. போட்டி விதிமுறைகள்படி முதற்கட்ட தேர்வை நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட கவிதைகளை தேர்வு செய்து தந்த சேதுக்கரசி, இறுதிக்கட்டத் தேர்வில் கவித்துவமும் காதல் உணர்வும் மிக்க சிறந்த கவிதையாக ஒன்றை தேர்வு செய்து தர கேட்ட போது அதன்படி பரிசுக்கவிதையை தேர்வு செய்த தமிழ்நதி ஆகியோருக்கு நன்றிகள்.

இதில் சுவையான ஒரு தகவல்... நெருக்கமான போட்டி இருந்தால் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யலாம் என்று கூறி இருந்தேன். தமிழ்நதிக்கு அனுப்பப் பட்ட பிரதியில் கவிஞர்கள் பெயர் இணைக்கப் படவில்லை. அதன்படி தமிழ்நதி தேர்வு செய்த இரண்டு கவிதைகளுமே பிரசன்னாவுடையது என்பதில் பிரசன்னா இரட்டை மகிழ்ச்சி அடையலாம். வாழ்த்துக்கள் பிரசன்னா!

( பிரசன்னா எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். sinthanadhi at gmail)

*

அடுத்ததாக ஒரு புகைப்படப் போட்டி வைக்கும் எண்ணம் இருந்தது. கடந்த போட்டி முடிவுகள் அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக அது நிறைவேறவில்லை. தற்போது செல்லா குழுவினர் புகைப்பட போட்டிக்கு என்றே ஒரு வலைத்தளம் துவங்கி தொடர்ந்து போட்டிகள் நடத்த இருப்பதால் தற்போது புகைப்பட போட்டிக்கு பதிலாக ஒரு ஓவியப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

கணினி ஓவியப் போட்டி.

விதிமுறைகள்

ஓவியம் கணினியில் வரையப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.

வரைதூரிகையாக மைக்ரோசாப்ட் பெயின்ட் மென்பொருள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எந்தவித ஸ்பெசல் எபக்ட்டும் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த விதிமுறை.

ஓவியம் 400x300 அளவில் வரைந்து சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

பெயின்ட் மென்பொருள் கொண்டு வரையக்கூடிய எத்தனை வண்ணங்களும் பயன்படுத்தலாம்.

கருப்பொருள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஓவியத் தலைப்பு மிகவும் முக்கியம்.

பதிவில் இட்டுக் கொண்டு இணைப்புத் தரலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். sinthanadhi at gmail

போட்டி முடிவு நாள் : ஜூலை 31.

61 comments:

  1. ✪சிந்தாநதி said...

    ஓவியம் 400x300 pixel அளவில் இருக்க வேண்டும்.

  2. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    ஒருவரே எத்தனை அனுப்பலாம்

  3. ✪சிந்தாநதி said...

    அதிக பட்சமாக மூன்று படைப்புகள் ஒருவர் அனுப்பலாம்.

  4. SurveySan said...

    :) I will try.

  5. Osai Chella said...

    முதலில் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள். பெயின்டில் படம் வரைந்ததே இல்லை.. ஏதோ வரைந்து பார்த்தால் என்ன என்று கிறுக்கினேன்!.. ஆகா என் கிறுக்கல் எனக்கு பிடித்துவிட்டது! என் படம் இங்கே!

  6. Boston Bala said...

    ‘ஆட்டு மாடு’ அல்லது ‘மாட்டு ஆடு

    இந்த மாதிரி ஏதாவது நிரலி உபயோகிக்கலாமா?

  7. வவ்வால் said...

    சிந்தாநதி ,

    சிந்தும் ஒரு நதியின் படம் அதாங்க நீர்வீழ்ச்சி!
    எதுக்கோ வரைந்தேன் எல்லாரும் போட்டிக்கு போறாங்களேனு நானும் வந்துட்டேன்!இதெல்லாம் எந்த வகை ஓவியம்னு யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்!

    http://vovalpaarvai.blogspot.com/2007/07/blog-post_24.html

  8. கொழுவி said...
    This comment has been removed by the author.
  9. ரவி said...

    இந்த பாபா போன்ற ஆட்களை ஆட்டத்தில் சேர்க்காதீங்க...அவங்க வீட்டு குழந்தைகிட்ட வரையச்சொல்லி கொண்டாந்துடப்போறார்...

    நானும் வரையப்போறேன்...!!!!! விடறதா இல்லை யாரையும்..

  10. SurveySan said...

    ஹ்ம். நெனச்ச மாதிரி லேசு பட்ட வேலையில்லை இது.

    எப்படியோ, நம்மால முடிஞ்சது. இங்க இருக்கு. க்ளிக்கிப் பாருங்கோ :)

    சொர்கவாசல்

  11. ✪சிந்தாநதி said...

    பாலா

    ‘ஆட்டு மாடு’ அல்லது ‘மாட்டு ஆடு' எதுவானாலும் பெயிண்ட் அடிக்க உதவாது.;)

    வவ்வால்

    உங்க படம் போட்டி விதிமுறைப்படி இருக்கான்னு ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்க.

  12. arulselvan said...

    போட்டியில் கலந்துகொள்ளும் நண்பர்களுக்கு உதவக்கூடிய (?)சில சுட்டிகள்.
    http://andaiayal.blogspot.com/2007/07/microsoft-paint.html
    அருள்

  13. ✪சிந்தாநதி said...

    நன்றி அருள்செல்வன்.

    பெயிண்ட் கொண்டு பெரிய ராஜாங்கமே நடத்தி இருக்கீங்களே...! மவுஸ் உங்க கைக்கு என்னமா வளைஞ்சிருக்கு...அற்புதம்

  14. பழூர் கார்த்தி said...

    சிந்தாநதி,

    என் பங்குக்கு நானும் போட்டியில்...
    இதோ நம் படைப்பு

    உங்கள் கருத்து மிகவும் அவசியம்!

  15. வவ்வால் said...

    சிந்தாநதி,

    பிக்செல் அளவினை(400x300) சரியாக கவனிக்கவில்லை,முன்னரே வரைந்த படம் என்பதால் , இப்போது அளவினைமாற்றிவிட்டேன்!

  16. வவ்வால் said...

    சிந்தாநதி ,

    அடுத்த படமும் தயார், "கொரியப்படப்புகழ்"செந்தழல் ரவி வேறு களத்தில் குதித்துள்ளார் அவருக்கு டஃப் பைட் கொடுக்க வேண்டாமா?

    http://vovalpaarvai.blogspot.com/2007/07/2.html

  17. Anonymous said...

    பெய்ன்ட் படப்போட்டி நடுவர்களே...

    இந்த 'மிளகாயை' போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    http://ullal.blogspot.com/2007/07/blog-post_24.html


    --aathirai

  18. Unknown said...

    இங்கே ஒரு கொலைவெறி ஓவியம் போட்டிக்காக

    http://kolaiveri.blogspot.com/2007/07/blog-post_24.html

  19. ALIF AHAMED said...

    போட்டியில் என் படத்தையும் சேர்த்துக்கங்க...

    :)


    http://www.youtube.com/watch?v=RdepbZlxFuQ

  20. Deepa said...

    என்னுடைய எண்ட்றீஸ் இங்கே இருக்கு
    http://thoduvanamnamullathil.blogspot.com/2007/07/blog-post_25.html

  21. Yogi said...

    என்னோட படத்தையும் போட்டியில் சேர்த்துக்கோங்க !!

    http://ponvandu.blogspot.com/2007/07/blog-post_25.html

  22. Osai Chella said...

    My second entry is also ready now! aanaa saththamillama paakkanum... Click Here

  23. ALIF AHAMED said...

    எனது மை வண்ணம் இங்கே..!!

    http://anony-anony.blogspot.com/2007/07/blog-post_25.html

  24. வவ்வால் said...

    சிந்தாநதி ,

    3 படம் மட்டும் தான் காட்டலாம்னு சொல்லிடிங்க என் கிட்டே இருக்கிற சரக்குக்கு அதுலாம் பத்தாது, எல்லாம் புதுசா படம் காட்டுறாங்க அதனால இன்னொரு படம் காட்டிக்கிறேன்(final one).

    கடல்புறாவைப்பார்க்க வாரீர்! 100% free show! no logic only magic!

    http://vovalpaarvai.blogspot.com/2007/07/3.html

  25. மாதினி/Madhini said...

    http://sarigamapadhanisa.blogspot.com/2007/07/blog-post_25.html

    http://sarigamapadhanisa.blogspot.com/2007/07/2.html

  26. aathirai said...

    நடுவர்களே - இதோ டாஸ்மாக் க்ளாஸ். இதையும் சேத்துக்கோங்க.

    http://ullal.blogspot.com/2007/07/blog-post_25.html

  27. சிவபாலன் said...

    இந்தாங்க.. இதையும் ஏடுத்துங்க..


    http://sivabalanblog.blogspot.com/2007/07/blog-post_8165.html

    ஆபிஸில் வேலை குறைவு.. அதுதான்.. இப்படி.. :)

  28. aathirai said...

    Last entry


    http://ullal.blogspot.com/2007/07/3.html

  29. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    ஒன்று http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post_26.html

  30. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    படம் இரண்டு ,
    http://sirumuyarchi.blogspot.com/2007/07/2.html

  31. Osai Chella said...

    http://osaichella.blogspot.com/2007/07/blog-post_26.html
    my last (third) entry

  32. சதங்கா (Sathanga) said...

    நம்ம முதல் ஓவியம்

    இங்கே க்ளிக்கவும்

    or

    http://vazhakkampol.blogspot.com/2007/07/1.html

  33. இரா. வசந்த குமார். said...

    ஆட்டத்துக்குத் தயார்...!

    http://kaalapayani.blogspot.com/2007/07/blog-post_26.html

  34. சதங்கா (Sathanga) said...

    நம்மளோட ரெண்டாவது படம்


    இங்கே க்ளிக்கவும்


    or

    http://vazhakkampol.blogspot.com/2007/07/2.html

  35. இரா. வசந்த குமார். said...

    next...:

    http://kaalapayani.blogspot.com/2007/07/blog-post_9664.html

  36. சதங்கா (Sathanga) said...

    எனது மூன்றாவது படம்

    இங்கே க்ளிக்கவும்

    or

    http://vazhakkampol.blogspot.com/2007/07/blog-post_27.html

  37. ALIF AHAMED said...

    இதோ கும்மி கழகம் சார்பாக போட்டியில் பரிசு எங்களுக்குதான்.. :)


    http://kummionly.blogspot.com/2007/07/2.html

  38. TBCD said...

    தனி ஒருவனாக வந்து கருத்து சொன்ன TBCD நீ வாழ்க! இந்தா பிடி பரிசுனு சொல்லுங்க பார்ப்போம்..
    TBCD:MS Paint போட்டி

  39. Jazeela said...

    படம் வரைய வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. என் பங்கு இங்கே

  40. ✪சிந்தாநதி said...

    மின்னஞ்சலில் வந்த படைப்புகள்:

    சுஜா கணபதி

    1. அறை (room)

    2. சகோதரி (sister)

  41. ✪சிந்தாநதி said...

    மின்னஞ்சலில் வந்த படைப்புகள்.


    கவிதா கஜானனன்

    1. கண்களில் ஒரு கவிதை.

    2. ஆற்றங்கரையில்

    3. இருளின் அழகு

  42. அமிழ்து - Sathis M R said...

    என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    http://amizhthu.blogspot.com/2007/07/blog-post_7430.html

  43. Boston Bala said...

    சுஜா கணபதி... படு எதார்த்தம்.

    'இருளின் அழகு' அமர்க்களம்

  44. ஹரிணி said...

    கணினி ஓவியப் போட்டிக்கான என் முதல் படம்!

    http://aaraniya.blogspot.com/2007/02/blog-post_11.html

  45. Jazeela said...

    கணினிப் போட்டிற்கான எனது மூன்றாவது படம்

    http://jazeela.blogspot.com/2007/07/3.html

  46. ✪சிந்தாநதி said...

    போட்டி நேரம் முடிவடைகிறது.

  47. Boston Bala said...

    இந்தப் பாட்டு தானியங்கியாகத் துவக்குவதை, விருப்பப்படி ஆரம்பிப்பதாக மாற்றலாமே :)

  48. SurveySan said...

    ரிஜல்ட் எப்போ?

  49. ✪சிந்தாநதி said...

    ஒரு முக்கிய அறிவிப்பு:

    போட்டிக்கு படங்களை அனுப்பிய நண்பர்கள் உடனடியாக தங்கள் படங்களை இணைத்துள்ள இடத்தில் இருந்து தனியாக உங்கள் கணினியில் சேமித்து சோதித்துக் கொள்ள வேண்டுகிறேன். போட்டி விதிமுறைகளின் படி படங்கள் 400x300 pixel என்ற அளவில் இருக்க வேண்டும். + or - 5 pixel இருந்தால் கூட பரவாயில்லை. அதையும் சரி செய்தால் நல்லது. கணினி என்ற ஊடகம் ஒவ்வொரு புள்ளி அளவு துல்லியத்தையும் செய்ய இயலக்கூடியது.


    மேலும் பலரது படங்கள் பிளாக்கரில் பதிவேற்றும்போது large என்ற setting தராமல் mediam என்ற செட்டிங் செய்த்தால் படம் சிறியதாகி இருப்பதாக தெரிகிறது. அவர்களும் தங்கள் படத்தை சரியான அளவுக்கு மாற்றி அதே தளத்தில் இணைக்கவோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பவோ செய்யவும்

    ஆகஸ்ட் 15 வரை திருத்தம் செய்ய அனுமதி உண்டு அதன்பிறகு சரியான அளவில் உள்ள படங்கள் மட்டுமே இறுதித்தேர்வுக்கு அனுப்பப் படும்.

    புதிய படங்களும் அதுவரை அனுப்பலாம். அதாவது போட்டி ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப் படுகிறது. விதிமுறைகளை சரியாக பின்பற்றவும்.

  50. Deepa said...

    ரெசல்ட் எப்போ சொல்லுவீங்க ? ? ?

  51. Osai Chella said...

    ஆமா ரிசல்ட் சொல்லிட்டீங்களா? ஒரு தகவலும் இல்லையே?

  52. ✪சிந்தாநதி said...

    போட்டி முடிவுகள் செப்டம்பர் 5 வெளியாகும்... (ரொம்ப லேட்டோ? கொஞ்சம் பிஸி பாஸ்;)

  53. சதங்கா (Sathanga) said...

    //போட்டி முடிவுகள் செப்டம்பர் 5 வெளியாகும்... //

    எந்த வருசமுங்க ...

  54. ✪சிந்தாநதி said...

    ஸாரி பாஸ்

    எதிர்பாராத நெருக்கடிகள். அங்கே இங்கே திரும்ப முடியல. கணினி+ இணையப் பிரச்சினைகள் வேறு.

    sorry again.

    எல்லோரும் ரொம்ப ஆவலோடு காத்திருக்கீங்கன்னு தெரியுது. please இன்னும் ஓரிரு நாள் பொறுத்துக்கங்க... என் கணினிப் பிரச்சினை சரியானதும் வருகிறேன்.

  55. Deepa said...

    /// ஓரிரு நாள் பொறுத்துக்கங்க... என் கணினிப் பிரச்சினை சரியானதும் வருகிறேன்.
    September 8, 2007 10:57 AM////

    இன்னிக்கி ஸெப்டம்பர் - 25... எதையோ தேடி இங்கே வந்தேன்.. என்னன்னு உங்களுக்கு ஞ்யாபகம் வருதா ? ? ?

  56. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    அதானே 40+ பின்னூட்டத்துல பாத்தா இப்படி ஒரு போட்டி நடந்ததா தெரியுது .. ஆமாவா??

  57. Osai Chella said...

    hello! ithu navamber maasam. innum yaar jeyichaangannu arivikkalainnu siwthaanathikku kandanamnu waalaikku pathivu vanthalum varum aamaa! :-)

  58. Anonymous said...

    any updates coming ?

  59. Anonymous said...

    ...please where can I buy a unicorn?

  60. Anonymous said...

    I think, that you are not right. I am assured. I suggest it to discuss. Write to me in PM.

  61. Anonymous said...

    You are not similar to the expert :)