பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Monday, April 9, 2007

☺ மீண்டும் பட்டிமன்றம்

கிரிக்கெட் போட்டிக்கு ஒரே ஒரு ஆக்கம் மட்டுமே வந்துள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு இன்னும் தொடரும் போட்டுட்டு...

இன்றைய பட்டிமன்ற தலைப்புக்கு வருவோம்.

இது வழக்கமான பட்டி மன்ற விவாதம். ஒருவர் சொன்ன கருத்தை மறுத்தும் ஒட்டியும் புதிய கருத்தும் சொல்ல வேண்டும்.வழக்கம் போல சிறந்த கருத்துக்கு பரிசு உண்டு. இந்த வார போட்டிக்கு பரிசு வழங்குபவர் பொன்ஸ்.

-oOo-

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்கிறார்கள். நல்லவங்க அரசியலுக்கு வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். இது இப்படி இருக்க இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளெல்லாம் அரசியல் களங்களாகி விட்டன. அரசியல் கட்சிகளில் மாணவர் அணி என்று கூட தனியா வச்சிருக்காங்க....

படிக்கிற வயசில மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்று ஒரு தரப்பு குரல் கொடுக்கிறது. இப்போது நீங்க சொல்லுங்க...

மாணவர்களுக்கு படிக்கிற வயசில் அரசியல்

தேவை X தேவையில்லை.

18 comments:

  1. நந்தா said...

    படிக்கிற வயதில் மாணவர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்பது என் கருத்து. அரசியல்தான் தேவை இல்லையே தவிர, அரசியல் அறிவு கண்டிப்பாகத் தேவை.

    இதுவரை யாரும் எதுவும் சொல்லாத காரணத்தினால், "தேவை" என்று சொல்பவர்கள் என்ன விதமான காரணங்களை சொல்லலாம் என்று யோசித்துப் பார்த்தால், பின்வரும் காரணங்கள் தோன்றுகின்றன.

    1.பல அரசியல் தலைவர்கள், அந்த காலத்தில் மாணவர்களாக இருந்த போதிருந்தே இருந்தவர்கள் தானே! இப்போது மட்டும் ஏன் தேவை இல்லை என்று சொல்கிறீர்கள்?

    2. கோரிக்கைகளையோ, சலுகைகளையோ முன் வைத்து போராட அரசியல் பலம் தேவை.

    3.இந்த வயதிலேயே இணைந்தால்தான், படிப் படியாக முன்னேறி பின்னாளில் தலைவனாக வர முடியும்.

    4.அரசியல் எனும் சாக்கடையை திருத்த.

    முதலாவது:
    1910 க்குப் பிறகு இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமான பிறகும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போதும், பரவலாக பல மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போதுள்ள சில தலைவர்கள் கூட மாணவப் பருவங்களிலேயே போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்தான். ஆனால் அப்போதிருந்தது போல் ஒரு அசாதாரண சூழ்நிலையோ அல்லது தீவிரமாக போராட்டங்களில் ஈடு பட வேண்டிய சூழ்நிலையோ இப்போது இங்கு இல்லை. ஆகையால் அப்போது தேவை இருந்தது. இப்போது தேவை இல்லை. எனவே இந்த காரணம் பலமிழந்துப் போகிறது.


    இரண்டாவது:
    ஏதாவது போரட்டங்கள் நடந்தால் அதை அரசியல் ரீதியாகவே எதிர் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அதுவுமில்லாமல் ஒரு பிரச்சினையை அரசியல் கட்சியின் சார்பாக அணுகும் போது, அந்த பிரச்சினையே வலுவில்லாமலேயே போய் விடுகிறது.உதாரணத்திற்கு, போனஸ் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ, போக்குவரத்துத் துறையினர் போராடும் போது, எந்த கட்சியினர் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க் கட்சியைச் சார்ந்த போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமே முழு மூச்சுடன் போரடுகின்றனர். இதனால் அடிப்படைத் தொழிலாளர் பிரச்சினை என்பது,வெறும் அரசியல் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப் படுகிறது. இது எல்லாத் துறைகளிலுமே நடக்கிறது. ஆகையால் மாணவர்கள் எதாவது சலுகைகளுக்காக போரடும் போது அதை அரசியல் கலப்பில்லாமல் செய்வதே அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த காரணத்திற்காகவும் அவர்களுக்கு அரசியல் தேவை இல்லை.

    மூன்றாவது:
    இப்படி எல்லாம் சொல்லி சும்மா கிச்சு கிச்சு மூட்டாதீங்க. நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்.

    நான்காவது:
    நியாயமான எண்ணமே. ஆனால் பொருளாதாரம், அனுபவம், எழுத்தறிவு இம்மூன்றிலும் முழு தன்னிறைவு பெறாத ஒரு அடிப்படை மாணவத் தொண்டனால் இது செய்யக்கூடிய காரியமில்லை. இதற்கு வேறு ஏதேனும் அணுகுமுறையைத்தான் யோசிக்க வேண்டும்.

    பல ஊர்களில் இப்போது பெரும்பாலான கல்லூரிகளில் (சட்டக் கல்லூரிகள் உட்பட) நடை பெறும் தேர்தல்கள் சட்டமன்றத் தேர்தலையே தோற்கடிக்கும் அளவுக்கு அதிக ஆடம்பரத்துடனும், வன்முறையுடனும் தான் நடை பெறுகிறது. இது சென்னையில் ரொம்ம்ம்ம்ம்பவே அதிகம். அதாவது அந்த ஒரு வாரத்திற்கு பெண்கள் கல்லூரிக்கு போக பயப்படும் அளவிற்கு கூட உள்ளது. இது எல்லாம் அரசியல் கட்சிகளின் அதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியின் விளைவுதான். இதற்கு மிக எளிதாக மாணவர்கள் பலியாகின்றனர். இதற்காகவே மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்பேன்.

    இதற்கு யாரேனும் மாற்று கருத்து வைத்திருந்தால் அது குறித்தான எனது பார்வையை நான் தெளிவு படுத்துகிறேன். இப்போதைக்கு இது போதும். மறுபடி சொல்கிறேன். அரசியல்தான் தேவை இல்லையே தவிர, அரசியல் அறிவு கண்டிப்பாகத் தேவை.

  2. MSATHIA said...

    இன்னா நைனா இப்டி சொல்லிகினே. நம்ம நண்பர் ஒருத்தர்கீறார். சொம்மா படிப்புன்னு படிப்புன்னு சுத்திக்கினு இருந்தார். இன்னா சாதிச்சார் கட்சீல. நம்ம கைல வந்து ரெக்மண்டேசன் கேக்கறார் நான் தான் எமெல்லே கைல சொல்லி வேல வாங்கி கொட்த்தேன்.. ஆ.. நான் இன்னா ஆளுன்னு சொல்வே இல்லய்ல..நான் தாம்ப 18ஆம் வட்ட கவுன்சிலரு. இன்னா பட்சேன்னு கேட்டா ஊட்டாண்ட ஆட்டோ வரும். 8வது படிக்கசொல்ல பாட்டில் உட்டவன் நான். யார் கைல வந்து இன்னா கேள்வி கேக்கறே.. மாணவனுக்கு அரிசியல் வேணுமா வேணாமான்னா கேக்றே.. மொதல்ல.. எந்த வயசு மாணவன்னு தெளிவா சொல்லு.. அப்பால இன்னொரு மேட்டர்... இப்போ பட்சவன்னெல்லாம் இன்னா பண்றான், ஓட்டு போடவே வர்றதில்லை.. அவன் பையனையும் படிக்க வைக்கறான். எவனாவது அரசியல் பக்கம் வர்றான.. இல்லை.. ஒரு பய வர்றதில்லை..அப்போ படிக்காத ஊர சுத்தினு இருக்கற பசங்களுக்கு இன்னா தொழில் இருக்கு... ஆடு மாடு மேக்கலாம். அதுக்கு வேற இப்போ நிலத்தையெல்லாம் புடுங்கறாங்களாமே.. அப்போ இன்னா தான் பண்ரது நாங்கோ.. அதுனால அரசியல்ல சேர்றதுக்கு மாணவ பருவம் தான் சரியானது.. இன்னா..பட்சவன் வந்தா இன்னா பண்றாதா.. அதெல்லாம் வரமாட்டாங்கோ.. அப்பிடியே வந்தாலும்.. ராஜ்யசபாவுலே அவங்களுக்குன்னு எட ஒதுக்கீடு.. கொட்துக்குறோம்..

  3. நந்தா said...

    என்ன கச்சேரி இன்னும் களை கட்ட மாட்டேங்குதே?

  4. MSATHIA said...

    எப்டி களைகட்டும்.. இங்கே அல்லாரும் பட்சவங்கோ.. அரிசியில்னாலே ஒதுங்கி பூடுவாங்கோ...பட்சவங்களுக்கெல்லாம்.. பொய்துபோக்கு தாம்பா லாயக்கு... அதுனால தான் சொல்றேன்.. இட்லிக்கு தொட்டுக்க சட்னியா .. சாம்பாரான்னு சிந்தாநதிய போடசொல்லி பாரு அப்பால வருவாங்கோ.
    அரிசியல் ரொமப கஷ்டம்பா.. அடி வாங்கி பாத்தாதான் தெரியும்... ... நாடு உருப்படணும்னா.. அல்லாரும் அரிசியலுக்கு வரணும். இப்பொ இப்டி ஓசிச்சுப்பாரு.. மாணவனா இருக்க சொல்ல.. படிக்கணும்.. அப்பால வேலைக்கு போணும் அப்பால ஒய்வு எடுக்கணும். அப்போ எப்போ தான்யா வருவீங்க... இப்பிடியே போய்கினு இருந்தா? அல்லாரும் வரட்டும் வரட்டுனுதான் சொல்லிகினேகீறோம்.. ஆளாதான்காணோம்..

    பின்னுட்டத்துகே டிஸ்கி :-)
    (தலைப்பே ஒருதலைபட்சமானது..யாரகேட்டாலும் மாணவப்பருவத்தில அரசியல் தேவை இல்லைன்னு தான் சொல்ல பொறாங்க.. இதுல இருந்த 4-5 பாயிண்டையும். நீங்களே சொல்லிட்டா என்னத்த சொல்றது. அதுதான் இப்டி :-))

  5. நந்தா said...

    "S" அவர்களே, நீங்க மாணவர்கள் வரணூம்ங்கறீங்களா, கூடாதுங்கறீங்களா. ஒண்ணும் புரியலை.

    எனக்கு ஒரு டவுட். என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே......

  6. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    எப்படியும் நந்தா பக்கத்துக்குத்தான் நடுவர் தீர்ப்பு சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

    களகட்டலன்னு வருத்தமா?

    நந்தாவின் பாயிண்ட் களை அவரே மறுத்தும் பேசியிருந்தார். அதற்கான என் கருத்துக்கள்.

    1. இடஒதுக்கீடு , நாட்டில் தீவிரவாதம் என்று இன்னபிற அசாதாரண நிலைகள தொடர்ந்து இருக்கிற தே அதுக்காக மாணவர்கள் போராடறதுக்கு அரசியல் உதவாதா?கலாம் போன்றோர் மாணவர்கள் தான் நாளைய இந்தியாவை முன்னேற்ற முடியும் என்று முடிவு செய்து பள்ளிக்கூடத்தில் போய் ஆசிரியராக இருக்க நினைக்கும்போது அவர்களை நாளைய அரசியலில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர இப்போதே தயார் படுத்த வேண்டாமா?
    2.நாம் இருப்பது போன்ற நாட்டில் எல்லாவற்றுக்கும் அரசியல் இல்லாமல் முடியாது . சலுகைக்காக வேறு எங்கே போய் போராடுவது.அரசாங்கத்திடம் அல்லது ஆளும் கட்சியிடம் போராடும் போது அங்கே அரசியல் வந்து விடுகிறதே.

    3.இன்றய தலைவனாக இல்லாவிட்டலும் ஒரு கட்சியில் பொறுப்புகளை வகிக்க தகுதியைப்பெற உதவலாமே .

    4.நியாயமான எண்ணம் என்று குறிப்பிட்ட பின்னர் அதன் நியாயத்தை சரீயாக நிலைநாட்ட முயற்சி செய்யத்தானே வேண்டும்.

    \\அரசியல்தான் தேவை இல்லையே தவிர, அரசியல் அறிவு கண்டிப்பாகத் தேவை.//
    அறிவியல் படிப்புக்கு ஒரு லேப் போல , ப்ராஜக்ட் போல அனுபவ அறிவு தேவை என்றே தோன்றுகிறது.

    சிறுவயதிலேயே அரசியல் தேவை இல்லையென்று அறிவுறுத்தப்படுவதால் தான் அதனுள் பெரிதான வுடன் நுழைய தயக்கம் வருகிறது. குடும்ப அரசியல் ஏன் வருகிரது. அவர்கள் தன் குடும்பத்தில் யாராவது அந்த துறையில் இருந்தால் சிறுவயது முதலே அறிந்து அனுபவித்து உணர்ந்து அதனை தங்களது எதிர்காலமாக எடுத்துக்கொண்டு இறங்குகிறார்கள் தயக்கம் இருப்பதில்லை.

  7. உண்மைத்தமிழன் said...

    அன்பு சிந்தாநதியாரே.. வணக்கம். சவுக்கியமா? இதுக்கு மேல விசாரிக்க மாட்டேன்.. உங்க மேல ரொம்பக் கோவமா இருக்கேன்..

    //கிரிக்கெட் போட்டிக்கு ஒரே ஒரு ஆக்கம் மட்டுமே வந்துள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு இன்னும் தொடரும் போட்டுட்டு...//

    இதெல்லாம் ரொம்ப ஓவர் ஸார்.. ஒருத்தர் நாமினேஷன் பண்ணி வேற யாரும் எதிர்த்து பண்ணாம விட்டா எதிர்ப்பே இல்லை.. முதல் நபர் சரி.. அல்லது அவர் சொன்னது சரிதான்னு சொல்லி ஜெயிச்சவரா அவரை அறிவிச்சிரணும்.. இஇதுதான் சாதாரண வார்டு மெம்பர் தேர்தல்ல இருந்து ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தல் வரைக்கும் நடக்குது.. ஆனா இங்க.. ஒரேயொரு ஆக்கம் மட்டும் வந்திருக்குன்னு சொல்லி நிறுத்தி வைச்சு ஆப்பு வைச்சிட்டீங்க.. இது கொஞ்சமும் நியாயமில்ல.. நான் விடமாட்டேன்.. சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போயாவது நியாயம் கேட்பேன்..

    எனதருமை வலைத்தமிழ் மக்களே.. எனக்காக கொஞ்சம் குரல் குடுங்கப்பா.. பரிசுல Share தர்றேன்..

    அப்புறம் அடுத்ததா ஒரு போட்டியாமே.. விட்ருவானா இந்த உண்மைத்தமிழன்?

    மாணவர்களுக்கு படிக்கிற வயசில் அரசியல் தேவையா? தேவையில்லையா? நான் தேவையில்லைன்ற கட்சி ஸார்..

    இதோ எனது பிளாக்கர்ல என் தரப்பு வாதத்தை வைச்சிருக்கேன் ஸார்.. கொஞ்சம் வந்து கணக்கெடுத்துக்குங்க..

    முகவரி : http://truetamilans.blogspot.com/

  8. நந்தா said...

    இப்பதான் கொஞ்சம் களையே கட்டுது.

    இங்கே மாணவன் என்பதற்கான வயது வரம்போ, விளக்கமோ எதுவும் கொடுக்கப் படவில்லை. நான் இதை இன்னும் சரியாக மெச்சூரிட்டி அடையாத வயதுடைய மாணவர்கள் என்ற பார்வையில்தான் பார்க்கிறேன். (8 ஆம் வகுப்பிலிருந்து, U.G or P.G வரை). இதற்கு அர்த்தம் Students எல்லோரும் மெச்சூரிட்டி இல்லதவர்கள் என்பதில்லை. அரசியலில் ஈடுபடுமளவிற்கு மன முதிர்ச்சி அடையாதவர்கள் என்றுதான் சொல்கிறேன். ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம்.

    பள்ளியை முடித்து முதன் முதலில் மிரண்ட விழிகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு மாணவனும் அந்த வயதில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். அவர்களிற்கு அரசியலும் ஒரு பிரச்சினையாக இருந்து விடக் கூடாது என்றுதான் சொல்கிறேன். அந்த வயதில் அவர்களிற்குத் தேவை அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தெளிவான புரிதலே. சரியான புரிதலின்றி நேரடியாக அரசியலில் இறங்குவது நிச்சயம் ஏற்புடையதல்ல.

    பல வித காரணங்களிற்காக தற்கொலையில் ஈடுபடுபவர்கள் அதிகம் மாணவப் பருவத்தினரே என்று புள்ளி விவரங்களும் சொல்கின்றன. மிக எளிதில் உடைந்து விடக் கூடிய,கோபப் படக் கூடிய, உணர்ச்சி வசப் படக் கூடிய மன நிலையை உடையவர்கள் அவர்கள். அவர்களை முதலில் மன ரீதியாக தயார் படுத்த வேண்டுமே தவிர, தடாலடியாக அரசியலில் ஈடு படுத்தக் கூடாது.

    ஒண்ணும் வேணாங்க. தன்னை விட ஒரு வருஷம் சின்னவன் என்ற காரணத்திற்காகவே, ராகிங்கின் பெயரால் அவன் மீது ஆளுமை செலுத்துபவர்கள் மாணவர்களில் பெரும்பாலானோர் உள்ளனர். தோசையில் உப்பு அதிகம், சோத்துல கல் என்று ஒன்றுமில்லாத பல விஷயங்களிற்கு, 10 நாட்கள் கல்லூரியை மூட வைத்து, அதில் தன் வீரத்தை நிலை நிறுத்த முயலும் மாணவத் தலைவர்கள்தான் இங்கு அதிகமாக உள்ளனர். இவ்வளவு ஏன்? கல்லூரியில் நடைபெறும் தேர்தல்களை அவர்கள் முதலில் ஒழுங்காக நடத்தட்டும்.அப்புறம் சட்ட மன்றத் தேர்தலில் ஈடுபடலாம்.
    அரசியலில் ஈடுபடுவது என்பது சாதாரணமன்று. அவமரியாதையை தாங்கிக் கொள்ளுதல், பொறுமை, விமர்சனங்களை எதிர் கொள்ளும் தன்மை, சாத்வீகமான போராட்ட முறை இவையனைத்தும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். வீண் பழிகள் தன் மீது விழும் போது கலங்காமல் போராடும் துணிவு வேண்டும். முக்கியமாக உணர்ச்சி வசப் படாமல் முடிவுகளை எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    நானும் ஸ்டூடண்டா இருந்தவன்தான். இது அவர்கள் மீதான வசை பாடல் இல்லை. அந்த வயதிற்கே உரியத் திமிருடன், நானும் திரிந்திருக்கிறேன். அதனாலேயே என்னால் இதனை சொல்ல முடிகிறது.சரியான புரிதலின்றி, அரசியலில் ஈடுபடும் மாணவர்கள், மிக எளிதாக மோசமான வழிகாட்டுதலுக்குட்பட்டு, தவறான செயல்களில் ஈடுபட நேரிடும். இது கடைசியில் அவர்கள் மீதும், மக்களுக்கு வெறுப்பைதான் ஏற்படுத்தும். எனவே இப்போது அவர்களிற்குத் தேவை மன முதிர்ச்சியும், அரசியலறிவும் தான். அதைத்தான் கலாமும் செய்து வருகிறார். இப்போதிருக்கும் நிலையில் எல்லோருடைய ஒரே நம்பிக்கை இளைஞர்கள் மட்டும் தான். கத்தியைப் போன்றவர்கள்தான் அவர்களும். அழிக்கும் சக்தியாக பிறர் பயன் படுத்திவிடக் கூடாதே என்பதுதான் என் கவலை.

  9. உண்மைத்தமிழன் said...

    சிந்தாநதியாரே, கிரிக்கெட் ஒத்திவைப்பை வரவேற்கிறேன்.

    தங்களுடைய உத்தரவுக்கிணங்க போட்டிக்கான கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

    "படிக்கிற வயதில் மாணவர்களுக்கு அரசியல் தேவை-தேவையில்லை"

    இதோ என் தரப்பு வாதம் :

    கல்லூரி மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்பது எனது கருத்து. காரணம் கல்லூரி என்பது கல்வி கற்பிக்கும் இடம். அங்கே உள்ளே நுழையும் மாணவர்களுக்கு அந்தக் கல்விதான் அவர்களுடைய வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும். மாணவர்கள் தங்களது கவனங்களை வேறுவேறு தளங்களில் செலவிட்டால் அவர்களது கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும். இத்திறன் பாதிக்கப்படும்போதுதான் அம்மாணவர்களுக்கு தங்கள் மீதே கோபம் வந்து அதை இந்தச் சமுதாயத்தின் மீது திசை திருப்புகிறார்கள்.

    உதாரணமாக 'பஸ் டே' என்ற பெயரில் நூறு மாணவர்கள் பஸ்ஸின் மீது ஏறி நின்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக வலம் வருகிறார்கள். சில இடங்களில் இந்த ஆட்டம் அளவுக்கதிகமாகிவிட பஸ் சேதத்திற்குள்ளான சம்பவங்களும் நடந்தன. இப்போது அந்த சேதத்தை யார் ஈடுகட்டுவது? பேருந்து என்பது பொதுச் சொத்து. அதை வாங்குவதற்குரிய பணத்திலும், கமிஷன் கொடுத்த பணத்திலும், பராமரிப்பு செய்யும் பணத்திலும் அம்மாணவரின் குடும்பமும் தனது பங்கைச் செலுத்தியிருக்கிறது என்பது அம்மாணவருக்குத் தெரியுமா? தெரியாது.. புரியாது.. காரணம் அதற்கேற்ற அடிப்படை கல்வி அவனிடம் இல்லை.

    இப்போதைய பொருளாதார நுகர்வின் காரணமாக விலைவாசிகள் உயர்ந்துதான் உள்ளன. கல்லூரிக் கட்டணங்களும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டன. ஒவ்வொரு தாய், தகப்பனும் பைசா, பைசாவாக காசு சேமித்து தங்களது பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். இந்த பிள்ளைகள் கல்லூரியில் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களோடு வெளியில் வந்து வேலைக்குச் சேர்ந்து தாங்கள் கடன்பட்ட இந்த படிப்புக் கடனையாவது அடைத்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு உண்டு. இந்த நம்பிக்கையை பிள்ளைகள் காப்பாற்றியே ஆக வேண்டும்.

    அரசியல், சினிமா என்று தங்களது கவனத்தைப் படிக்கும் காலத்திலேயே செலவிட்டால் படிப்பில் ஆர்வம் குறையும். அதனால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது. மதிப்பெண்கள் குறைந்தால் வேலை வாய்ப்பும் குறைவுதான். இப்போதெல்லாம் பட்ட மேற்படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு வைத்திருக்கிறார்கள். அவற்றில் பாஸ் செய்தால்தான் மேற்படிப்பு படிக்க இயலும். போதாக்குறைக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரை மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளில் மாணவர்கள் நுழைய முடியாத தடைகளும் உள்ளன. இந்த நேரத்தில் அந்த அரை மதிப்பெண் அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியதாக உள்ளது பாருங்கள்..

    கல்லூரிகளில் படிக்கும்போது அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குச் சென்று வருவது. அரசியல்வாதிகளுடன் கலந்து பேசுவது என்பது மாணவர்களுக்கு போதை தரக்கூடிய விஷயங்கள் அவர்தம் மனதில் வித்தாவதற்கு காரணமாகிவிடும். அரசியல்வாதிகளின் நாளொன்றுக்கு, பொழுதொன்றுக்கு பேசும் பேச்சும், யாரையும் மதிக்காமல் ஏளனமாகப் பேசுகின்ற பேச்சு, அதிகாரிகளை மதிக்காத மமதை, எதையும் அதிகாரத்தால் சாதிக்கும் தற்பெருமை, கடைசியாக யாருக்குமே அடங்காத பண்பு இவையனைத்தும் அரசியல்வாதிகளிடமிருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விஷமாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது.

    இதன் தொடர்ச்சியாக இதையே மாணவர்களும் ஹீரோத்தனம் என்ற பார்முலாவின் அடிப்படையில் தொடர்ந்தால் அவர்களுடைய வீட்டிலும், வெளியிலும் அவர்களுடைய நடவடிக்கைகள் மாறும். பெற்றோரை எடுத்தெறிஞ்சு பேசுவது.. பொய் சொல்வது. திருடுவது, அசிங்கமான வார்த்தைகளை சர்வசாதாரணமாக பயன்படுத்தவது முக்கியமாக யாருக்கும் பயப்படாமல் இருப்பது.. இவையெல்லாம் ஒரு மனிதனின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கக் கூடிய விஷயங்கள்..

    இந்த மாணவனின் பெற்றோர் எவ்வளவு ஆசையோடு தங்கள் பிள்ளைகளை வளர்த்து கல்லூரிக்கு கொண்டு வந்து விட்டிருப்பார்கள். தங்கள் பிள்ளை நன்கு படித்து நல்ல பெயரெடுக்க வேண்டும் என்றுதான் அனைத்து பெற்றோர்களும் நினைப்பார்கள். கல்லூரிப் படிப்பில் மனதை அலைபாய விடாமல் தடுத்து கல்வி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மாணவர்கள் படித்து முன்னேறினால்தான் அவர்களால் வெகு சீக்கிரம் நல்ல வேலையில் சேர முடியும்.

    மாணவர்களுக்கு அரசியல் பற்றிய அறிவு இருந்தாலே போதும்.. அரசியல் தேவையில்லை. முதலில் தங்களது குடும்பத்தை நல்லவிதமாக வைத்துக்கொண்டு அதன் பிறகு இப்போது தனக்கு நிறைய நேரம் இருக்கிறது.. தன்னால் பொதுநல வாழ்க்கையில் உண்மையாக, நேர்மையாக நடந்து கொள்ள முடியும் என்று ஒருவன் நினைத்தால் அவன் பொது வாழ்க்கைக்கு வரலாம்.. தவறில்லை.

    ஆனால் படிக்கும் பொழுதே வந்தால், அவர்களை இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், தங்களை வாழ்த்தி கோஷம் போடவும், தங்களுக்குப் பதிலாக காவல் துறையிடம் அடி வாங்குவதற்கும், உண்ணாவிரதத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக ஆஜர்படுத்துவதற்கும்தான் பயன்படுத்தவார்கள்.

    காரியம் முடிந்ததும் கருவேப்பிலையாக இந்த மாணவர்களைத் தூக்கியெறியவும் தயங்க மாட்டார்கள். ஒரு வேளை அப்போது இந்த மாணவர்கள் மனம் திருந்தி கல்விதான் முக்கியம் என்று திரும்பி வந்தால்.. ஸாரி.. காலம் திரும்பி வர முடியாதே.. அவர்களுடைய பொன்னான வாழ்க்கையே வீணாகப் போயிருக்குமே..

    நம் நாட்டின் இன்றைய அரசியல், சமூக சூழ்நிலைக்கு மாணவர்கள் அரசியல் வருவது, அவர்கள் தங்கள் கழுத்தில் தாங்களே தூக்குக் கயிற்றை மாட்டிக் கொள்வது போலாகும்.

    எனவே மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்தில் கல்வியைத் தவிர வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்து கல்வியின் முதலிடம் பெற்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.

    நன்றி.. வணக்கம்..

  10. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    \\கத்தியைப் போன்றவர்கள்தான் அவர்களும். அழிக்கும் சக்தியாக பிறர் பயன் படுத்திவிடக் கூடாதே என்பதுதான் என் கவலை//


    கத்தியைத் தீட்டி வையுங்கள் இல்லையென்றால் மழுங்கி விடப்போகிறது.
    ----------
    \\பிள்ளைகள் கல்லூரியில் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களோடு வெளியில் வந்து வேலைக்குச் சேர்ந்து தாங்கள் கடன்பட்ட இந்த படிப்புக் கடனையாவது அடைத்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு உண்டு//


    இதுஎல்லாம் சுயநலங்க...நாட்டுக்காகப்போராட காமராஜர் மாதிரி இன்னொரு தலைவர் வரவேமாட்டாங்க. அரசியலில் இருப்பவர்களுக்கும் சம்பளம் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்.


    \\கல்வி பயிலும் காலக்கட்டத்தில் கல்வியைத் தவிர வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்து கல்வியின் முதலிடம் பெற்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.//

    படிச்சு வேற வேலை செய்யறது தான் வாழ்வில் உயர்வாகறதா...அரசியல் சாக்கடைன்னு சொல்லி வெளியே நிறூத்திவைக்கறது மாதிரியே இன்னோர் காரணம்.

    நம்மளக்காப்பாத்த யாராலும் முடியாது.
    குடும்ப அரசியல் தான் வேற வழியே இல்லை. இந்த்க்குடும்பம் இல்லன்னா அந்த குடும்பம்.

    ---நந்தாவும் உ.தமிழனும் ஒருகட்சியா..ரெண்டுபேருல யாருக்க்கு பரிசு கிடைக்கப்போகுது .சத்யன் வந்தார் சவுண்டு விட்டார் ..அப்பறம் வந்து பாக்குறேன்.

  11. உண்மைத்தமிழன் said...

    //மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்தில் கல்வியைத் தவிர வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்து கல்வியின் முதலிடம் பெற்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.//

    முத்துலஷ்மி மேடம், நான் இந்த விஷயத்தில் மிக உறுதியாகவே இருக்கிறேன். இப்போதெல்லாம் அனைத்து அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் யார் என்று பார்த்தால் முதலிடம் பணக்காரர்களுக்குத்தான்.. (கவனிக்கவும், சொந்த ஜாதிக்காரனாகவே இருந்தாலும்) இரண்டாமிடம் நல்ல பேச்சாளர்கள். (காலையில் திருடன், கொள்ளைக்காரன், ஊழல்வாதி என்று சொல்லிவிட்டு மாலையில் அவர் நூறு ரூபாய் மாலையைக் கொண்டு வந்து கழுத்தில் போட்டவுடன் அன்புத் தம்பி, அருமை உடன்பிறப்பு, வீரம் கொண்ட வீரன் என்றெல்லாம் மாற்றிப் பேசத் தெரிந்த பேச்சாளர்கள்) இது மாதிரி சந்தர்ப்பவாத அரசியல்தான் இப்போது நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த அநாகரீக அரசியல்வாதிகளை குறைந்தபட்சம் ஒரு ஐந்தாண்டுகளாகவாவது கண்காணித்து அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதற்குக் குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா?

    இப்போது தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ கோர்ட்டுகளுக்கு நேரில் சென்று பாருங்கள்.. எத்தனை எத்தனை கட்சிக்கார தொண்டர்கள் ஏதோ ஒரு வகையான அரசியல் வழக்குகளின் வாய்தாகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை.. எம்.எல்.ஏ.க்களும், கட்சிப் பிரமுகர்களும், நிர்வாகிகளும் ஒரு கட்சி ஆட்சி இழந்து மறுகட்சி ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் அடுத்த நாளே கரை வேட்டியை மாற்றிக் கட்டிக் கொண்டு தங்கள் மேல் உள்ள வழக்குகளையும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள்.

    ஆனால் சாதாரணத் தொண்டர்கள்.. அவ்வளவுதான்.. அவன் ஆயுசு முழுக்கவும் கோர்ட்டுக்கு நடந்து நடந்து தன் காலைத் தேய்த்துக் கொள்ள வேண்டியதுதான்..

    இதுதான் நிஜம் மேடம்.. தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களைச் சுற்றிலும் வாழ்க கோஷம் போட்டுக் கொண்டும் குத்தாட்டம் ஆடும் அழகிகளை ரசித்துக் கொண்டும் ஓடி வரும் இள வயது தமிழர்களெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள். கண்டிப்பாக அந்த வேட்பாளரின் மகன்களோ, மகள்களோ, பேரன்களோ, பேத்திகளோ அல்ல.. பள்ளிப் படிப்பு ஏறாமல், அல்லது குடும்பச் சூழல், சமூகச் சூழலால் படிப்பு ஏற முடியாமல் போன கடைசி பெஞ்ச் மாணவர் சிங்கங்கள்தான்.. இவர்களெல்லாம் பிற்காலத்தில் என்னவாக வந்து தமிழகத்தை வளம் பெற வைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். வேதனை மேடம்.. வேதனை..

  12. நந்தா said...

    //கத்தியைத் தீட்டி வையுங்கள் இல்லையென்றால் மழுங்கி விடப்போகிறது.//

    இல்லீங்க நான் சொல்ல வருவது அது இல்லை. அதுக்குத்தான் சொன்னேனே, அரசியலறிவு கண்டிப்பாகத் தேவை என்று. மாணவப் பருவத்தில் தான் அரசியல் வேண்டாம் என்று சொன்னேனே தவிர, அரசியல் எப்போதும், யாருக்கும் வேண்டாம் என்று சொல்ல வில்லை.

    நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு 18 வயது மாணவனை அரசியல் வாதிகள் எப்படி உபயோகித்துக் கொள்வார்கள்? இளைஞர் அணி அல்லது மாணவர் அணி செயலாளர் பதவி கொடுத்தா. இல்லை நிச்சயம் இல்லை. அந்த மாணவர் முதலில் கட்சி அடிப்படை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளப்படுவார். அப்புறம் கட்சி சம்பந்தப் பட்ட போஸ்டர்களை ஒட்ட, பொதுக்கூட்டத்திற்கு ஆள் குறையும் போது வெற்றிடத்தை நிரப்ப, வாழ்க ஒழிக கோஷத்தை ஆக்ரோஷத்துடன் சொல்ல, உள்ளூர்த் திருவிழாக்களில், கட்சியின் சார்பில் த்ண்ணீர்ப் பந்தல் வைத்து வெயிலில் காய, இதற்குத்தான் பயன் படுத்தப் படுவார்கள். (சாயங்காலம் 6 மணிபோல மடிப்பு கலையாத, வெள்ளை வேட்டி சட்டை போட்ட கட்சியின் வட்ட துணைப் பொதுச் செயலாளர் தண்ணிர்ப் பந்தலுக்கு ஒரு நாலு பேருடன் விசிட் செய்து, "என்னப்பா, நல்லா வேலை செய்யறே போல இருக்கே! மேலிடத்துல உன்னையப் பத்தி சொல்லி இருக்கேன். எங்கேயோ போய்டுவ. கவலைப் படாதே என்று தட்டிக் கொடுத்துவிட்டுப் போவார். அப்போது அந்த அப்பிராணி மாணவனின் கண்களில் உலகை வென்று விட்ட திருப்தி தெரியும்).

    என்னுடன் பள்ளிப் படிப்பு வரை முடித்துவிட்டு, உள்ளூரிலேயே ஒரு கட்சியில் சேர்ந்துக் கொண்டு, இன்று வரை வேலை வெட்டி இல்லாமல், சின்னச் சின்ன பஞ்சாயத்துக்களுக்கு கட்சி ஆட்களுடன் போய் வந்து விட்டு, தான் ஒரு பெரிய ஆள்தான் நினைத்துக் கொண்டு திரியும் ஒரு இளைஞனை எனக்குத் தெரியும். தொடைத் தெரியக் கட்டப் பட்ட லுங்கியுடனும், கட்சி பனியனுடனும் இன்றும் அவனை எங்கள் ஊரில் நடக்கும் எல்லா கூட்டங்களிலும் காணலாம். ஆனா ஒண்ணுங்க! அவனே குடிச்சிட்டு எங்கயாவது தகராறு பண்ணாலும், ஒரு பய அவன் மேல கை வெக்க முடியாது. இதைத் தவிர அவனுக்கு அரசியலால ஒரு பிரயோஜனமும் இல்லை. அவனும் அரசியலுக்கு வந்து ஒண்ணும் பண்ணலை.

    உலகைப் பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாத மாணவர்கள் தவறாக உபயோகப் படுத்தப் படுவார்கள் என்றுதான் வேண்டாம் என்று சொல்கிறேன். ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

    "நல்ல ஜாதி நாய் ஒன்று வேண்டும்.
    எங்கே வாங்கலாம்? என்று நண்பர் கேட்டார்.
    நான் சொன்னேன்.
    இந்திய அரசியல் பண்ணையில்,
    தொண்டன் என்றொரு நாய் உண்டு.
    அதை வாங்குங்கள்.
    மூன்றே மூன்று பிஸ்கட் போட்டால்,
    எட்டி உதைத்தாலும், காலைத்தான் சுற்றிவரும்"

    சுய சிந்தனை, பொருளாதாரம், அனுபவம், எழுத்தறிவு இவற்றில் தன்னிறைவு பெறாத மாணவர்கள் வறட்டுத் தொண்டர்களாக மட்டுமே இருப்பார்கள். சாக்கடை சாக்கடையாகவே இருக்கும்.

  13. நந்தா said...

    என்னங்க யாரையும் காணோம். யப்பா யாராவது வந்து ஏதாவது ஒரு பிட்டை போட்டுட்டு போங்கப்பா. அப்பதான நாங்க அடிச்சுக்க முடியும்.

  14. ✪சிந்தாநதி said...

    மிச்சம் மீதி அடிச்சிக்ககிறதை இந்திய நேரம் இன்று மாலை 6 மணிக்குள்ள அடிச்சிக்கங்க... ;)

    6 மணிக்கு போட்டி முடித்து நடுவருக்கு அனுப்பப்படும். முடிவு நாளை அறிவிக்கப் படும்.

  15. நந்தா said...

    சரி கடைசியாக எனது வாதம். இப்போதுள்ள சூழ்நிலையில் அரசியலைத் திருத்த கையிலிருக்கும் ஒரே ஆயுதம் இளைஞர்கள் மட்டுமே (கவனிக்க.இளைஞர்கள் என்று சொல்கிறேன்). இந்த சூழ்நிலையில் மாணவப் பருவத்திலேயே அவசரப்பட்டு அவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுத்தப் பட்டால், தவறான வழிகாட்டுதலுக்குட்படுத்தப் படுவார்கள். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாமென்பதற்கு நான் சொல்லும் காரணம் அவர்கள் மோசமானவர்கள் என்பதல்ல. அவர்கள் இன்னும் பக்குவப் பட வேண்டியவர்கள் என்பதே.

  16. நந்தா said...

    நாட்டாமை தீர்ப்பு என்னாச்சு?

  17. Boston Bala said...

    முடிவு எங்கே இருக்கு??

  18. ✪சிந்தாநதி said...

    http://valai.blogspirit.com/archive/2007/04/20/students.html