பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Monday, April 30, 2007

காதல் கவிதைப் போட்டி

இதுவரை பட்டி மன்ற போட்டிகளாக பார்த்து வந்த உங்களுக்கு இன்று சற்று வித்தியாசமாக காதல் கவிதைப் போட்டி...!

இது வழக்கமான காதல் கவிதைப் போட்டி அல்ல.

இதில் சில விதிமுறைகள் உண்டு.

முதலாவதாக காதல், இதயம், அவன், அவள், நான், நீ , பெண்ணே, கண்ணே, அன்பே என்னும் ஒன்பது சொற்களும் கவிதையில் இடம் பெற்றிருக்க கூடாது.

எந்த ஒரு சொல்லும் கவிதையில் இரண்டு முறை இடம்பெறக் கூடாது.

பிறமொழிச் சொற்களும் இடம்பெறக் கூடாது.

கவிதை இரண்டு வரி குறும்பாவாகவோ பெரிய கவிதையாகவோ இருக்கலாம். காதலை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே எங்காவது வெளியிடப்பட்ட பழைய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

கவிதையை இங்கே பின்னூட்டமாகவோ, தங்கள் பதிவுகளில் இட்டு சுட்டி தரவோ செய்யலாம்.

வழக்கம் போல வெற்றி பெறும் ஒருவருக்கு புத்தகப் பரிசு உண்டு.

இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10.

62 comments:

 1. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  ஒற்றையடிப் பாதையில்
  தனித்து போகாதே என்றேன்
  கேட்டாயா...
  இப்போது பார்
  பயமற்று
  ஆடைகளைய முயல்கிறது
  காற்று.

 2. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  ஜன்னலோர இருக்கைக்கு
  நமக்கிடையே வரும்
  சண்டையில் வழக்கம் போல
  இறுதியில் நீயே அமர்வாய்.
  அழகை வேடிக்கை
  பார்ப்பது சுகமெனில்
  அழகுடனே பயணிப்பது
  அதனினும் சுகம்!

 3. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  இருளில் மூழ்கிக்கிடக்கிறது
  ஊர்
  புழுக்கம் போர்த்தி இருக்கிறது
  எல்லோரையும்
  எனக்கு மட்டும்
  சாமரம் வீசுகிறதுன்
  நினைவுகள்.

 4. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  முதல் முத்தத்தை
  நினைவுகூறும் போதெல்லாம்
  கைகளால் முகம் மூடுகிறாய்
  விரல் இடுக்கில்
  வழிகிறதுன் நாணம்.

 5. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  அன்று
  நமக்கிடையே
  நுழைய முயன்று
  தோற்றுப் போன
  அதே காற்றுதான்
  இன்று
  மண்ணையள்ளி
  வீசிவிட்டுப் போகிறது
  பழைய கோபத்தில்!

 6. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  ஹிஹிஹிஹி

  இப்போதைக்கு அபிட்டு..அப்புறமா ரிபிட்டு. :)

 7. சென்ஷி said...

  யோவ் தல, இப்படி எல்லாத்தையும் நீயே போட்டுட்டா நாங்க என்னத்த சொல்றது.. உன்னை குரூப் வச்சு கலாய்க்கறது தப்பேயில்ல.. :))

 8. சேவியர் said...

  உன் சிரிப்புக்குள்
  என்
  உயிரை வைப்பதா ?
  உயிருக்குள்
  உன்
  சிரிப்பை வைப்பதா ?

  பதில் கேட்டால்
  மெலிதாய் சிரிக்கிறாய்

 9. சேவியர் said...

  விழித்து விடக் கூடாதே
  என்னும்
  நினைப்பில் தூங்கப் போகிறேன்,
  தூங்கவே விடாமல்
  விழிக்கின்றன உன் நினைவுகள்

 10. சேவியர் said...

  முடிவிலியின் முடிவில் நின்று
  துவக்கத்தின்
  துவக்கம் தேடி
  பயத்துடம் அலையும்
  பட்டாம்பூச்சி போன்றது
  என் பிரியம்

 11. சேவியர் said...

  பஞ்சபூதங்களும்
  கெஞ்சிக் கேட்க நினைக்கும்
  ஒன்றே ஒன்று
  அவள் பேரழகு தான்.

 12. சேவியர் said...

  உன்
  புகைப்படம் பார்த்துத்
  துயில்வதை விட
  உன்
  புகைப்படம் பார்த்து
  விழிப்பதை விரும்பிய கணத்தில்
  என் நேசம்
  வயதுக்கு வந்திருந்தது.

 13. சேவியர் said...

  மெளனங்கள்,
  ௾றுகிக் கிடக்கும் பாறை போல
  சுமையானவை.
  உன்
  கரம் கோர்த்த
  மெளனத்தைத் தவிர

  *

  ௾ந்தியாவின் எதிர்காலம்
  ௾ளைஞர்களின்
  கையில் என்கிறார்கள்
  ௾ளைஞர்களின் எதிர்காலம்
  உன் கையில்
  என்பதை அறியாதவர்கள்.

  *

  காதலி
  தேவதையானதால்
  நாத்திகர்களும்
  ஆராதனை செய்கிறார்கள்.

  *

 14. சேவியர் said...

  ஹி...ஹி... நானும் அப்பீட்டு !

 15. தேவ் said...

  போட்டிக்காக

  http://sethukal.blogspot.com/2007/04/blog-post.html

 16. சேதுக்கரசி said...

  ஆகா, கவிதைன்னா எங்க களமாச்சே.. இந்தப் பதிவுக்கான சுட்டியை அன்புடனில் அனுப்பியிருக்கேன்.
  எனக்கு ஏதாவது கவிதை தோணிச்சுன்னா அப்புறம் எழுதறேன். கடைசி நாள் எதுன்னு மட்டும் முடிவு பண்ணி, பதிவுல ஒரு வரி போட்ருங்க, சரியா?

 17. Boston Bala said...

  கவிதைகள் நன்று (போட்டிக்கான பின்னூட்டம் அல்ல :P)

 18. சென்ஷி said...

  மௌன சலனத்தில்
  மரண அதிர்வுகள்..
  பக்கத்தில் தோழி,
  மனதில்...!

  சென்ஷி

 19. சென்ஷி said...

  ஆயிரக்கணக்கில்
  அலை விடு தூது..
  யார் மீது உனக்கு
  மோகம் கடலே..!

  சென்ஷி

 20. சென்ஷி said...

  கைக்கெட்டும்
  தொலைவில்
  முத்தப்பூ..
  யார் முதலில்
  சூடுவது..?

  சென்ஷி

 21. சென்ஷி said...

  உன் அகராதியில்
  ஒவ்வொரு பக்கத்திலும்
  வெட்கத்தின் அர்த்தம்
  மௌனம் தானோ..!

  சென்ஷி

 22. சேதுக்கரசி said...

  //கைக்கெட்டும்
  தொலைவில்
  முத்தப்பூ..
  யார் முதலில்
  சூடுவது..?//

  நாகேஷ், ஒன்றாக சூடிக்கொள்ளும்போது முதலில், அப்புறம் என்றெல்லாம் பாகுபாடு வருமா என்ன?

 23. bhairavi said...

  என்னை உனக்குப் பிடிததால்
  எனக்கு பிடித்தது பைத்தியம்...

 24. bhairavi said...

  காதலித்துப்பார்...
  உனக்கும் கவிதை வரும் என்றார்கள்
  காதலிக்கிறேன்...
  கவிதையோடு சேர்த்து கடனும் வருகிறது

 25. சென்ஷி said...

  //நாகேஷ், ஒன்றாக சூடிக்கொள்ளும்போது முதலில், அப்புறம் என்றெல்லாம் பாகுபாடு வருமா என்ன?//

  அது சரி.. அப்ப அவங்க வெட்கத்தை என்ன பண்றது.. :))

 26. தமிழி said...

  காதலி,சாதிகள் சாம்பலாக
  என்னைக் காதலி!

 27. தமிழி said...

  கடைவிழி கடைவீதியில் நிறுத்தியது!?

 28. தமிழி said...

  அமுத விஷங்கள் உருவானது ஒரிடமே!
  நம்பவிலலை நான்! உன்னை பிரியும்வரை!!

 29. தமிழி said...

  காதலில் மட்டும் தான் மீன்கள் வலைவீச
  புலிகள் மாட்டிக்கொள்கின்றன.

 30. தமிழி said...

  ஆண் பெண்ணாவதும்,
  பெண் ஆணாவதும் கம்னியூசமில்லை!
  அது காதலிசம்!!

 31. தமிழி said...

  தேன் உறிஞ்ச வந்த வண்டை மலர் காதலனென்றாய்!

  ஊர் கண்டு மிரண்ட என் கண்களை மானென்றாய்!

  நேற்று வாங்கிய பொய்முடியை மயிலிறகென்றாய்!

  பாவாடை தடுக்க நடந்த என்னை அன்னமென்றாய்!

  மனம் தாவி வேறு மணம்புரிந்தால் என்னை குரங்கென்பாயோ!

 32. தமிழி said...

  போட்டி விதிகள் மீறி எழுத வைத்ததும் அதே காதல் தான்!

  :)

 33. வசந்த் said...

  http://kaalapayani.blogspot.com/2007/05/blog-post_08.html

 34. வசந்த் said...

  http://kaalapayani.blogspot.com/2007/05/blog-post_1892.html

 35. ப்ரசன்னா (குறைகுடம்) said...

  தினமும் கடக்கும்
  வழக்கமான சாலையில்
  பழகிய பள்ளங்களைப்
  போன்றது,
  உன்னைப் பற்றிய நினைவுகள்.
  தவிர்க்க நினைக்கும்
  கவனமான பயணங்களிலும்
  நிலைகுலைந்து விழ நேர்கிறது,
  ஓரிரு முறையேனும்.

 36. ப்ரசன்னா (குறைகுடம்) said...

  அன்றும்,
  உன் வருகையின் போது
  மழைக்கம்பிகளில்
  கவிதை கோர்த்துக்கொண்டிருந்தேன்.
  உயிர்த் தண்டவாளத்தில்
  தட தடத்த இடி மின்னலில்
  விழி இமைக்க,
  தொலைந்து போயிருந்தது
  மேகம் மட்டுமல்ல.
  என் குடிசை ஓலைகளின் வழியே
  இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது,
  தேங்கிய நீர்.

 37. ப்ரசன்னா (குறைகுடம்) said...

  தனிமையின் கூட்டத்தில்
  மூச்சுத் திணறி
  நிசப்தக் கயிறு
  குரல் வளையறுக்கும்போதெல்லாம்
  உன் விரல்களைப் பிடித்துத்தான்
  கரையேறுகிறேன்.
  ஆசுவாசமடையும் கணத்தில்
  காணாமல் போகின்றன கைகள்.
  ஆனாலும்
  ஒவ்வொருமுறையும்
  இறங்குகிறேன் தீக்குளத்தில்.
  சில நிமிடப் பற்றுதலுக்காய்
  ஏங்கியபடி.

 38. ப்ரசன்னா (குறைகுடம்) said...

  இன்றுதான்
  கண்டுகொண்டேன்.
  யசோதராவின் காலடியில்
  போதிமரம்.
  பாவம்,
  பழைய சித்தார்த்தன்.

 39. ✪சிந்தாநதி said...

  அறிவிப்பு:

  காதல் கவிதைப் போட்டிக்கான கடைசித் தேதி மே 15 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

 40. வசந்த் said...

  உன் பாத ரசத் துளிகள்.

 41. வசந்த் said...

  இவனை இவளால்..!மன்னிக்கவும். தங்கள் விதிகள் பலவற்றைத் தாண்டி வந்து விட்டது. எனினும், இணைத்துள்ளேன். நன்றி.

 42. Anonymous said...

  நன்றி கெட்டேனடா...!!!!


  மனம்...
  ரணமாகிய பொழுதுகளில்...
  தேம்பும் நெஞ்சின்
  தலைதடவி...
  விழி பூக்கும் துளியுலர்த்தி...
  கவிதையாய்
  தோள்சாய்த்து...
  ஆறுதல் சொல்வாயே!!!


  இதோ....
  இனியவ,
  தொடும் தூரத்தில்
  துப்பாக்கி தின்ற...
  உன்
  சடலம் !!!


  அழவும் திராணியற்று
  நிலம் பார்க்கிறேன்,
  நிலவிழந்த வானமாய்...


  ஹயா

 43. அருட்பெருங்கோ said...

  பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
  முத்தங்களால் இசை அமைக்கிறாய்.

 44. அருட்பெருங்கோ said...

  "சுற்றுலா போக என்னவெல்லாம்
  எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
  இரண்டு மனங்களும், ஒரு கனவும் போதாதா?

 45. அருட்பெருங்கோ said...

  யாருக்கும் கேட்டுவிடாமல்
  சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
  இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
  செல்பேசிகள் இரண்டும்!

 46. அருட்பெருங்கோ said...

  என்னுடைய பெயரை
  தமிழில் இருந்து
  காதலுக்கு மொழிபெயர்த்தால்
  உன்னுடையது வருகிறது!

 47. வசந்த் said...

  கிருஷ்ணா - இராதை. மன்னிக்கவும். தங்கள் விதிகள் பலவற்றைத் தாண்டி வந்து விட்டது. எனினும், இணைத்துள்ளேன். நன்றி.

 48. முத்துலெட்சுமி said...

  http://sirumuyarchi.blogspot.com/2007/05/blog-post_14.html

  எதோ எழுதி இருக்கேன். முடிந்த அளவு.

 49. வசந்த் said...

  உன் கண்களின்
  வெட்கம்
  அறியாத

  என் கைகளின்
  வெப்பம்
  அறியாதன

  உன் கண்கள்.

 50. வசந்த் said...

  துளி.

 51. ப்ரசன்னா (குறைகுடம்) said...

  ஒன்பது வார்த்தைகளோ,
  பிற மொழிச் சொற்களோ இல்லாத
  கவிதை,
  என் நுரையீரல் நிரப்பித் திரும்புகிறது.
  வாழ்நாள் முழுதும்,
  எண்ணற்ற தடவைகள்.

 52. ✪சிந்தாநதி said...

  இந்தப் போட்டிக்கான நேரம் நிறைவடைகிறது. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  போட்டி முடிவுகள் ஓரிரு தினங்களில் வெளியிடப் படும். நன்றி

 53. Anonymous said...

  போட்டியின் முடிவு அறிவிக்கப்படுமா!

  இல்லை...இன்னும் சில தினங்கள் ....??????? தொடருமா!!


  இப்படிக்கு..

  போட்டியில் கலந்து 'கொல்லாதாவன்'

  :))

 54. Anonymous said...

  வாய்ப்பு இருக்கின்றதா! பரிசு பெற்றவரை அறிவிக்க!

  இப்படிக்கு நம்பிக்கை 'இல்லாதவன்'

 55. ✪சிந்தாநதி said...

  தாமதத்திற்கு மன்னியுங்கள்...

 56. வள்ளி said...

  ஒன்றும் அறியா எனக்கு
  கவிதகளைகளும் பின்னூட்டங்களும்
  கற்றுத்தந்தன --- பற்றி

 57. Anonymous said...

  whats happened...?

  ithu chumma 'uttalakkidi' velaiyaa...?

 58. ✪சிந்தாநதி said...

  உங்கள் எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிக்கவும்.

  முடிவுகள் 16-07-07 அன்று வெளியாகும்.

 59. சேதுக்கரசி said...

  விடைதேடும் வினாவின் காதல் கவிதைப் போட்டிப் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உஸ்ஸ்ஸ்... அப்பாடான்னு இப்ப தான் அன்புடன் குழுமத்தின் கவிதைப் போட்டியை நடத்தறதுல உதவிட்டு வேலை முடிஞ்சுதுன்னு நினைச்சிட்டிருந்தேன்.. நெனப்பு தான் பொழப்பக் கெடுக்குமாம் என்றது கணினி. "டிங்"னு ஒரு சத்தம். என்னன்னு பார்த்தா நண்பர் சிந்தாநதி ஒரு உதவி வேணும்னார். செய்யாம இருக்கலாமோ? நடுராத்திரி ரெண்டு மணிக்கே செய்யணுமா காலைல செய்யலாமான்னு கேட்டேன்.. போட்டிக் கவிதைகளைத் தொகுத்து, போட்டியில் விதிமுறைகளை மீறாத கவிதைகளைத் தனியாப் பிரிக்கமுடியுமான்னு கேட்டார். சரின்னு பிரிச்சு மேய்ஞ்சாச்சு.

  கவிதைகளின் எண்ணிக்கை: 45
  விதிமுறைகளை மீறாததாகத் தோன்றியவற்றின் எண்ணிக்கை: 30
  கவிஞர்களின் எண்ணிக்கை: 11

  கவிஞர் பெருமக்கள்:

  யெஸ்.பாலபாரதி
  சேவியர்
  தேவ்
  சென்ஷி
  பைரவி
  தமிழி
  வசந்த்
  ப்ரசன்னா (குறைகுடம்)
  ஹயா
  அருட்பெருங்கோ
  முத்துலெட்சுமி


  "பின்னூட்ட எண்", கவிஞர் பெயர், எப்படி விதிமுறைகளை மீறிச்சுன்னு ஒரு விளக்கம். ரெடியா?

  8. சேவியர்: "உன்", "வைப்பதா" - இரண்டிரண்டு முறை வருகின்றன.

  11. சேவியர்: "அவள்" வந்துவிட்டாள் கவிதையிலொரு சொல்லாக :)

  12. சேவியர்: "உன்", "புகைப்படம் பார்த்து" இரண்டிரண்டு முறை வருகின்றன. இனிமேலாவது ஓவரா போட்டோ பார்க்காம இருங்க.. சரியா? ;-)

  13(ஆ). சேவியர்: "எதிர்காலம்", "இளைஞர்களின்", "கையில்" - இரண்டிரண்டு முறை வருகின்றன. அப்துல் கலாம் உங்களை ரொம்ப பாதிச்சிருக்காருன்னு நினைக்கிறேன் :)

  15. தேவ்: "சொல்ல" - இருமுறை வருகிறது. சும்மா சொல்லக்கூடாது.. ரொம்ப கவனம் செலுத்தி எழுதியிருக்கீங்கப்பா.. கண்டுபிடிக்கிறதே ஒரு சவாலாத் தான் இருந்துச்சு!

  26. தமிழி: "காதலி" - இருமுறை வருகிறது. உங்களச் சொல்லிக் குத்தமில்லை.. காதலி காதலின்னு காதலியையே நெனச்சிக்கிட்டு இருந்தா இப்படித்தான் ;-)

  28. தமிழி: "நான்"னு சொல்லிப்புட்டீங்களே!

  31. தமிழி: "என்னை" - இருமுறை வருகிறது.

  33. வசந்த்: "நான்", "நீ" எல்லாம் போட்டு தூள் கிளப்பிட்டீங்க போங்க!

  34. வசந்த்: தலைப்பிலேயே "காதல்" கலக்கல். அது போக "போல்", "உன்", "நம்", "நீர்" - பல சொற்கள் இரண்டிரண்டு முறை வருகின்றன.

  40. வசந்த்: "நான்" வருகிறது. அது போக, பல சொற்கள் பலமுறை வந்து பின்னிப் பெடலெடுத்துடுச்சு.

  41. வசந்த்: "நீ" முதல் "காதல்" வரை பலவிதமாய்க் கவிதையில் அத்துமீறினாலும் கோவிலில் அத்துமீற வழியில்லாம நல்ல பையனாக இருந்திருப்பீங்கன்னு நம்பறேன் ;-)

  47. வசந்த்: கிருஷ்ணன் இராதை கவிதையில் பல அத்துமீறல்கள்.. கிருஷ்ணனின் லீலைகளாக இருக்குமோ? :)

  49 & 50(அ). வசந்த்: துளி என்ற கவிதையில் "உன்" இருமுறை வருகிறது.

  50(ஆ). வசந்த்: "நீ", "நான்" என்று ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு ஆக்கிரமிக்கும் கவிதையிது :)

  சரி, என் வேலை கிட்டத்தட்ட முடிஞ்சுது. இனி ஓவர் டூ சிந்தாநதி :-) வர்ட்டா...

 60. ✪சிந்தாநதி said...

  நன்றி சேதுக்கரசி.

  *

  முதற்கட்ட தேர்வில் விதிமுறைகளை மீறிய கவிதைகள் நீக்கி இறுதிக் கட்ட பரிசீலனைக்குச் செல்லும் கவிதைகள் இவை.

  1.
  யெஸ்.பாலபாரதி said...

  ஒற்றையடிப் பாதையில்
  தனித்து போகாதே என்றேன்
  கேட்டாயா...
  இப்போது பார்
  பயமற்று
  ஆடைகளைய முயல்கிறது
  காற்று.

  ============================================================

  2.
  யெஸ்.பாலபாரதி said...

  ஜன்னலோர இருக்கைக்கு
  நமக்கிடையே வரும்
  சண்டையில் வழக்கம் போல
  இறுதியில் நீயே அமர்வாய்.
  அழகை வேடிக்கை
  பார்ப்பது சுகமெனில்
  அழகுடனே பயணிப்பது
  அதனினும் சுகம்!

  ============================================================

  3.
  யெஸ்.பாலபாரதி said...

  இருளில் மூழ்கிக்கிடக்கிறது
  ஊர்
  புழுக்கம் போர்த்தி இருக்கிறது
  எல்லோரையும்
  எனக்கு மட்டும்
  சாமரம் வீசுகிறதுன்
  நினைவுகள்.

  ============================================================

  4.
  யெஸ்.பாலபாரதி said...

  முதல் முத்தத்தை
  நினைவுகூறும் போதெல்லாம்
  கைகளால் முகம் மூடுகிறாய்
  விரல் இடுக்கில்
  வழிகிறதுன் நாணம்.

  ============================================================

  5.
  யெஸ்.பாலபாரதி said...

  அன்று
  நமக்கிடையே
  நுழைய முயன்று
  தோற்றுப் போன
  அதே காற்றுதான்
  இன்று
  மண்ணையள்ளி
  வீசிவிட்டுப் போகிறது
  பழைய கோபத்தில்!

  ============================================================

  9.
  சேவியர் said...

  விழித்து விடக் கூடாதே
  என்னும்
  நினைப்பில் தூங்கப் போகிறேன்,
  தூங்கவே விடாமல்
  விழிக்கின்றன உன் நினைவுகள்

  ============================================================

  10.
  சேவியர் said...

  முடிவிலியின் முடிவில் நின்று
  துவக்கத்தின்
  துவக்கம் தேடி
  பயத்துடன் அலையும்
  பட்டாம்பூச்சி போன்றது
  என் பிரியம்

  ============================================================

  13(அ)
  சேவியர் said...

  மெளனங்கள்,
  இறுகிக் கிடக்கும் பாறை போல
  சுமையானவை.
  உன்
  கரம் கோர்த்த
  மெளனத்தைத் தவிர

  ============================================================

  13(இ)
  சேவியர் said...

  காதலி
  தேவதையானதால்
  நாத்திகர்களும்
  ஆராதனை செய்கிறார்கள்.

  ============================================================

  18.
  சென்ஷி said...

  மௌன சலனத்தில்
  மரண அதிர்வுகள்..
  பக்கத்தில் தோழி,
  மனதில்...!

  ============================================================

  19.
  சென்ஷி said...

  ஆயிரக்கணக்கில்
  அலை விடு தூது..
  யார் மீது உனக்கு
  மோகம் கடலே..!

  ============================================================

  20.
  சென்ஷி said...

  கைக்கெட்டும்
  தொலைவில்
  முத்தப்பூ..
  யார் முதலில்
  சூடுவது..?

  ============================================================

  21.
  சென்ஷி said...

  உன் அகராதியில்
  ஒவ்வொரு பக்கத்திலும்
  வெட்கத்தின் அர்த்தம்
  மௌனம் தானோ..!

  ============================================================

  23.
  bhairavi said...

  என்னை உனக்குப் பிடித்ததால்
  எனக்கு பிடித்தது பைத்தியம்...

  ============================================================

  24.
  bhairavi said...

  காதலித்துப்பார்...
  உனக்கும் கவிதை வரும் என்றார்கள்
  காதலிக்கிறேன்...
  கவிதையோடு சேர்த்து கடனும் வருகிறது

  ============================================================

  27.
  தமிழி said...

  கடைவிழி கடைவீதியில் நிறுத்தியது!?

  ============================================================

  29.
  தமிழி said...

  காதலில் மட்டும் தான் மீன்கள் வலைவீச
  புலிகள் மாட்டிக்கொள்கின்றன.

  ============================================================

  30.
  தமிழி said...

  ஆண் பெண்ணாவதும்,
  பெண் ஆணாவதும் கம்னியூசமில்லை!
  அது காதலிசம்!!

  ============================================================

  35.
  ப்ரசன்னா (குறைகுடம்) said...

  தினமும் கடக்கும்
  வழக்கமான சாலையில்
  பழகிய பள்ளங்களைப்
  போன்றது,
  உன்னைப் பற்றிய நினைவுகள்.
  தவிர்க்க நினைக்கும்
  கவனமான பயணங்களிலும்
  நிலைகுலைந்து விழ நேர்கிறது,
  ஓரிரு முறையேனும்.

  ============================================================

  36.
  ப்ரசன்னா (குறைகுடம்) said...

  அன்றும்,
  உன் வருகையின் போது
  மழைக்கம்பிகளில்
  கவிதை கோர்த்துக்கொண்டிருந்தேன்.
  உயிர்த் தண்டவாளத்தில்
  தட தடத்த இடி மின்னலில்
  விழி இமைக்க,
  தொலைந்து போயிருந்தது
  மேகம் மட்டுமல்ல.
  என் குடிசை ஓலைகளின் வழியே
  இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது,
  தேங்கிய நீர்.

  ============================================================

  37.
  ப்ரசன்னா (குறைகுடம்) said...

  தனிமையின் கூட்டத்தில்
  மூச்சுத் திணறி
  நிசப்தக் கயிறு
  குரல் வளையறுக்கும்போதெல்லாம்
  உன் விரல்களைப் பிடித்துத்தான்
  கரையேறுகிறேன்.
  ஆசுவாசமடையும் கணத்தில்
  காணாமல் போகின்றன கைகள்.
  ஆனாலும்
  ஒவ்வொருமுறையும்
  இறங்குகிறேன் தீக்குளத்தில்.
  சில நிமிடப் பற்றுதலுக்காய்
  ஏங்கியபடி.

  ============================================================

  38.
  ப்ரசன்னா (குறைகுடம்) said...

  இன்றுதான்
  கண்டுகொண்டேன்.
  யசோதராவின் காலடியில்
  போதிமரம்.
  பாவம்,
  பழைய சித்தார்த்தன்.

  ============================================================

  42.
  Hayah said...

  நன்றி கெட்டேனடா...!!!!

  மனம்...
  ரணமாகிய பொழுதுகளில்...
  தேம்பும் நெஞ்சின்
  தலைதடவி...
  விழி பூக்கும் துளியுலர்த்தி...
  கவிதையாய்
  தோள்சாய்த்து...
  ஆறுதல் சொல்வாயே!!!

  இதோ....
  இனியவ,
  தொடும் தூரத்தில்
  துப்பாக்கி தின்ற...
  உன்
  சடலம் !!!

  அழவும் திராணியற்று
  நிலம் பார்க்கிறேன்,
  நிலவிழந்த வானமாய்...

  ============================================================

  43.
  அருட்பெருங்கோ said...

  பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
  முத்தங்களால் இசை அமைக்கிறாய்.

  ============================================================

  44.
  அருட்பெருங்கோ said...

  "சுற்றுலா போக என்னவெல்லாம்
  எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
  இரண்டு மனங்களும், ஒரு கனவும் போதாதா?

  ============================================================

  45.
  அருட்பெருங்கோ said...

  யாருக்கும் கேட்டுவிடாமல்
  சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
  இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
  செல்பேசிகள் இரண்டும்!

  ============================================================

  46.
  அருட்பெருங்கோ said...

  என்னுடைய பெயரை
  தமிழில் இருந்து
  காதலுக்கு மொழிபெயர்த்தால்
  உன்னுடையது வருகிறது!

  ============================================================

  48.
  முத்துலெட்சுமி said...

  http://sirumuyarchi.blogspot.com/2007/05/blog-post_14.html

  "சிறகு பெற்ற மனது"

  இன்று
  சிட்டுக்குருவியினை ஒத்த
  சிறகுபெற்ற என் மனது
  உன் இருப்பிடம் தேடி,
  வீட்டின் முற்றத்தில் இறங்கி,
  உதட்டிலிருந்து சிதறிய சொற்களை
  கடவுளின் பிரசாதமென
  கொணர்ந்து சேர்க்கிறது.

  நாளை மீண்டும் ஒரு
  வண்ணத்துப்பூச்சியென
  ஜன்னலின் ஊடாக நுழைந்திருக்கும்.
  என்னிடமல்லாமல் வேறு யாரோடும்
  பேசும் ஒவ்வோர் வார்த்தைகளையும் கூட
  வேதமென எழுதி வைக்கிறது.

  மறுநாளும் அதற்கப்புறமும்
  வழிதவறியதாகச் சொல்லிக்கொண்டு
  வாசல் நுழையும் வண்டென,
  திரைச்சீலைத் தள்ளி தைரியமாய் எட்டிப்பார்க்கும் தென்றலென,
  நித்தம் பல உருமாறி,
  தன்வேலையைச் செவ்வனே
  செய்யும் அது.

  ============================================================

  50(இ)
  வசந்த் said...

  http://kaalapayani.blogspot.com/2007/05/blog-post_6383.html

  உன் இதழ்களைச்
  சுவைக்கும்
  ஆப்பிளை அனுப்பியது
  மறுபடியும்
  அதே சாத்தானா?

  ============================================================

  51.
  ப்ரசன்னா (குறைகுடம்) said...

  ஒன்பது வார்த்தைகளோ,
  பிற மொழிச் சொற்களோ இல்லாத
  கவிதை,
  என் நுரையீரல் நிரப்பித் திரும்புகிறது.
  வாழ்நாள் முழுதும்,
  எண்ணற்ற தடவைகள்.

  ============================================================

 61. ✪சிந்தாநதி said...

  போட்டி முடிவுகள் இங்கே

 62. ப்ரசன்னா (குறைகுடம்) said...

  சிந்தாநதி மற்றும் விடை தேடும் வினா குழுவினருக்கு எனது நன்றிகள்.